`எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு! - சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் தயாரித்த ரசிகர் பெருமிதம் | Super deluxe fan made poster design by moolesh says that experience

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:19:16 (01/04/2019)

`எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருக்கு! - சூப்பர் டீலக்ஸ் போஸ்டர் தயாரித்த ரசிகர் பெருமிதம்

விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், பக்ஸ், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் நடித்திருக்கும் திரைப்படம், 'சூப்பர் டீலக்ஸ்'. தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் இந்தப் படம், பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. விமர்சனங்களைத் தாண்டி, படத்தில் நடித்தவர்களின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. இதேபோல, படம் ரிலீஸ் அன்று சென்னை மாநகரம் முழுக்க 'ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று வலம்வந்தது. இதை உருவாக்கிய ரசிகர் மௌலீஷ் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினேன். 

சூப்பர் டீலக்ஸ் மூலேஷ்

''என்னோட சொந்த ஊர் சேலம். சிவில் இன்ஜினீயர் படிச்சிட்டு கன்ஸ்ட்ரக்‌ஷன் சம்பந்தப்பட்ட வேலைகள் பார்த்துட்டு இருக்கேன். என்னோட பொழுதுபோக்கு வரையுறது. அப்படி நான் ஃபேன் மேட் போஸ்டரா நிறையப் படங்களுக்கு வரைஞ்சிருக்கேன். அப்படித்தான் 'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கான போஸ்டரை கார்த்திபன் என்பவர்கூட சேர்ந்து  உருவாக்கினேன். படத்தோட டிரெய்லர் பார்த்துட்டுதான் இந்த போஸ்டர் பண்ணுனேன். ட்ரெய்லரில் நடிச்சவங்களுடைய முகபாவனைகளை அடிப்படையா வெச்சுதான் வொர்க் பண்ணினேன். 

சூப்பர் டீலக்ஸ்

 ஆனா, அதுக்காக எனக்கு நல்ல ரீச் கிடைச்சது. படத்துக்கு போஸ்டர் டிசைன் பண்ணுன கோபி பிரசன்னா சார் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். என்னுடைய போஸ்டர் டிசைனை வாங்கி, சென்னையில் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தினார். இது எனக்கு சந்தோஷமா இருந்தது. படத்தின் ப்ரிவ்யூ ஷோக்கான டிக்கெட் கொடுத்தாங்க. படம் பார்த்தேன். என்னுடைய வொர்க், கோபி பிரசன்னா சாருக்கு பிடிச்சிருந்ததாகக் கூறினார்'' என்று மகிழ்ச்சியாகச்  சொன்னார் மௌலீஷ். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க