``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்! | parthiban releved the suspense

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:11 (02/04/2019)

``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் சஸ்பென்ஸ்!

பார்த்திபன்

நாடளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டு வரும் வேளையில் பலதரப்பட்ட கட்சிகளும் பரபரப்பாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் சில மணி நேரங்களுக்கு முன்பு `எந்தச் சின்னத்திற்கு நான் ஆதரவு அளிக்கப் போகிறேன் என்பதனை இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கிறேன் என்பது போல் ட்வீட் தட்டியிருந்தார். இதனால், இவரது அரசியல் அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில் பார்த்திபன் அவரது முடிவை அறிவித்து விட்டார். ஆனால், இவரது அறிவிப்பை பார்த்த பலரும் ஏமாற்றமடைந்ததே மிச்சம். `வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு' என்ற ரீதியில் படம் ஒன்றைப் போட்டு, அதில் ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும். ' என்று பதிவு செய்திருக்கிறார்.

ஒத்தசெருப்பு சைஸ் 7

அவர் இயக்கி நடிக்கப் போகும் 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்துக்கு இது புரோமோஷன் மாதிரியே இருந்தது. எந்தவொரு விஷயத்திலும் நய்யாண்டியை கையாளும் பார்த்திபன் இதிலும் தன்னுடைய கேலி, கிண்டல், நய்யாண்டியை கையாண்டு சப்புனு ஆக்கி விட்டார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க