`இப்போதைக்கு திருமணம் இல்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அலியா பட்! | aliya bhat refuse wedding rumours with Ranbir kapoor

வெளியிடப்பட்ட நேரம்: 21:34 (02/04/2019)

கடைசி தொடர்பு:21:34 (02/04/2019)

`இப்போதைக்கு திருமணம் இல்லை' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அலியா பட்!

இந்தியில் பிரபல நடிகர், நடிகையாக இருப்பவர்கள் ரன்பீர் கபூர், ஆலியா பட். இவர்கள் இருவரும் காதலித்துவருவதாகத் தகவல்கள் வந்தன. 

ரன்பீர் கபூர் - அலியா பட்

சில தினங்களுக்கு முன்பு, 64-வது ஃபிலிம் ஃபேர் விருது விழா நடந்தது. இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை 'சஞ்சு' படத்தில் நடித்ததற்காக ரன்பீர் கபூர் வாங்கினார். அதேபோல, சிறந்த நடிகைக்கான விருதை 'ராஷி' படத்தில் நடித்தற்காக அலியா பட் வாங்கினார்.

விழாவில் பேசிய அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும், தங்களது காதலை வெளிப்படுத்திக்கொண்டர். இதனால், இவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். 

இந்நிலையில், ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட்டின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால், இது பொய் என்று அலியா பட் மறுத்துள்ளார். அதேநேரம், இப்போதைக்கு அவர்கள் திருமணம் செய்யப்போவதில்லை என இருவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க