``அப்பா, இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை" - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்!  | mahendran son's tweet about his father

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:33 (03/04/2019)

``அப்பா, இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை" - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்! 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் மகேந்திரன். `முள்ளும் மலரும்', `உதிரிப்பூக்கள்', `ஜானி', `நெஞ்சத்தை கிள்ளாதே', `மெட்டி' என்று அவர் உருவாக்கிய திரைப் படைப்புகள் எல்லாமே இன்றும் என்றும் பேசப்படுபவை. 12 படங்களே இயக்கியிருந்தாலும் அனைத்தும் தமிழ் சினிமாவில் பொக்கிஷமாக கருதப்படுகிறது.

மகேந்திரன்

தனது நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களின் மனதைத் தொட்டவர். விஜய்யின் தெறி, ரஜினியின் 'பேட்ட' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். 79 வயதான இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இவர் நினைவாக அவரின் மகன் ஜான் மகேந்திரன் உருக்கமாக ட்வீட் செய்திருந்தார். அதில், ``அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்கப்போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்படப் போவதில்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்கப் போகிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க