தெலுங்கில் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி! | Vijay sethupathi to act in Telugu movie as villan

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (03/04/2019)

கடைசி தொடர்பு:15:47 (03/04/2019)

தெலுங்கில் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகன் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் கேரக்டர்கள் யதார்த்தமாக இருக்கும். அதனாலேயே, இவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் பலதரப்பட்ட கேரக்டரை ஏற்று நடித்த விஜய் சேதுபதி `பேட்ட' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறாராம் சேதுபதி. 

விஜய் சேதுபதி

ஏற்கெனவே தெலுங்கில் `சைர நரசிம்ம ரெட்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஹீரோ சிரஞ்சீவி ஆவார். இதில் நயன்தாரா மற்றும் அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். தற்போது சாய் தருண் தேஜ் தம்பி நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தை புஜ்ஜி பாபு சனா  இயக்குகிறார்.  `ரங்கஸ்தலம்' படத்தின் இயக்குநர் சுகுமார் இந்தப் படத்துக்கான கதையை எழுதி தயாரிக்கவும் செய்கிறார். விஜய் சேதுபதி இந்தப் படத்தில் வில்லனாக நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்களிடமும் காணப்படுகிறது. இதுதவிர தற்போது விஜய் சேதுபதி கையில் மொத்தம் 18 படங்கள் இருக்கின்றன. இதனால் இரண்டு வருடங்களுக்கு சேதுபதியின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க