``எப்படி உடம்பைக் குறைச்சீங்கன்னு கேட்டார் தல!”- இசையமைப்பாளர் ஜிப்ரான் | ghibran shared about his first meeting with ajith

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (03/04/2019)

கடைசி தொடர்பு:18:27 (03/04/2019)

``எப்படி உடம்பைக் குறைச்சீங்கன்னு கேட்டார் தல!”- இசையமைப்பாளர் ஜிப்ரான்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிக்கின்ற படம் `நேர்கொண்ட பார்வை’. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான், அஜித், வித்யா பாலன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ஜிப்ரான்

அது குறித்து ஜிப்ரானிடம் கேட்டபோது, ``வினோத் எனக்கு ரொம்ப நாளா பழக்கம். அவர்கிட்ட அஜித் சாரை பார்க்கணும்னு கேட்டுட்டே இருந்தேன். அவர்தான் ஹைதராபாத் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொன்னார். அங்க 8 மணியில இருந்து 2 மணி வரை இருந்தேன். அஜித் சாருடைய தீவிர ரசிகன் நான். அவரை முதன்முறை நேர்ல பார்த்தவுடனே எனக்குள்ள அவ்ளோ சந்தோசம். என் படங்கள் பத்தி எல்லாம் பேசுனார். ``ராட்சசன்’ படத்துல பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பரா இருந்ததுன்னு பாராட்டியவர், சீக்கிரமா சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு சொன்னார். சினிமாவுல என்னென்ன நடக்குது, யார் என்னென்ன படங்கள் பண்றாங்கன்னு கவனிச்சுட்டுதான் இருக்கார், தல. ரெண்டு பேரும் ஃபேமிலி, ஹெல்த்னு நிறைய விஷயங்கள் பேசினோம். `எப்படி உடம்பைக் குறைச்சீங்கன்னு கேட்டார்.

நான் ஃபாலோ பண்ண விஷயங்களை அவர்கிட்ட ஷேர் பண்ணேன். அவரும் எனக்கு சில ஐடியாக்கள் கொடுத்தார். திடீர்னு வித்யா பாலனும் வந்தாங்க. அவங்களும் இருப்பாங்கன்னே எனக்கு தெரியாது. அவங்ககூட போட்டோ எடுக்கும்போது, `அங்கே லைட் இல்லை. இந்தப் பக்கம் வாங்கன்னு சொல்லி அவரே போனை வாங்கி எங்களை போட்டோ எடுத்தார். அப்போ, நான் போன் கேமராவைப் பார்க்காமல் அஜித் சாரையேதான் பார்த்துட்டு இருந்தேன். உண்மையில், அவர்கூட இருந்த அந்த ஐந்து மணி நேரம் வாழ்க்கையில மறக்கவே முடியாது. இதுக்கு வினோத்துக்குதான் நன்றி சொல்லணும்’ என்றார் பூரிப்புடன்.   

ஜிப்ரான்

நீங்க எப்படி பீல் பண்றீங்க