பாலிவுட்டில் அசத்தல் என்ட்ரி - ரன்வீர் சிங்குடன் `1983’ உலகக் கோப்பை அணியில் இணைந்த ஜீவா! | jiiva joins world cup team with ranvir singh

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (04/04/2019)

கடைசி தொடர்பு:12:11 (04/04/2019)

பாலிவுட்டில் அசத்தல் என்ட்ரி - ரன்வீர் சிங்குடன் `1983’ உலகக் கோப்பை அணியில் இணைந்த ஜீவா!

பாலிவுட்டில் அறிமுகமாகும் ஜீவா, ரன்வீர் சிங்குடன் தனது பயிற்சியைத் தொடங்கினார்.

ஜீவா

1983 ஜூன் 25-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையைத் தேசத்துக்குக் கொண்டு வந்தது. இதை மையமாக வைத்து  '83' என்ற படம் தயாராகவுள்ளது. அன்றைய தேதியில் இந்திய அணியின் புதிய  கேப்டனாக அறிவிக்கப்பட்ட கபில்தேவ் தலைமையில் இந்திய அணி எப்படி கோப்பையை வென்றது என்ற கதையைப் படமாக எடுக்கவுள்ளார் பாலிவுட் இயக்குநர் கபீர் கான். 

JIIVA

இப்படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார். 1983 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள்  குவித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நம் ஊர் நடிகர் ஜீவா நடிக்கிறார். இப்படத்துக்காக பிரத்யேக கிரிக்கெட் பயிற்சியைப் பஞ்சாப் மாநிலம் தரம்சாலாவில் இந்த அணியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

83

இந்தப் புகைப்படத்தை நடிகர் ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கபில் தேவின் மகள் அமியா தேவ் இப்படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வருவது கூடுதல் சுவாரஸ்யம். உலகமெங்கும் 10 ஏப்ரல் 2020 அன்று `83’ திரைப்படம் வெளியாகும் எனத் தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.