`சிவாஜி மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்' - ஹர்பஜனைத் தொடர்ந்து தமிழில் ட்வீட்டும் அமிதாப் | Actor amithab bachchan tweet about sivaji ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:12:55 (04/04/2019)

`சிவாஜி மாஸ்டர் .. நாம் அவருடைய சீடர்கள்' - ஹர்பஜனைத் தொடர்ந்து தமிழில் ட்வீட்டும் அமிதாப்

அமிதாப் பச்சன்

`கள்வனின் காதலி' படத்தின் இயக்குநர் தமிழ்வாணன் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் `உயர்ந்த மனிதன்'. எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இந்தப் படத்தில் தமிழில் முதல் முறையாக அமிதாப் பச்சன் நடிக்கிறார். 

அமிதாப் பச்சன்

தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என்பதாலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும், இந்தப் படத்தின் புகைப்படங்களை வெளியிட்ட எஸ்.ஜே.சூர்யா என் வாழ்க்கையின் சந்தோஷமான தருணம் இது. நான் ஒருபோதும் காணாத கனவை நினைவாக்கிக் கொடுத்த கடவுள், அப்பா, அம்மாவுக்கு நன்றி. அதைப் பகிர்ந்த ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார். படத்தின் இயக்குநர் தமிழ்வாணனும் ட்விட்டரில் அவரின் மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார். 

அமிதாப் ட்வீட்

இந்த நிலையில், நடிகர் அமிதாப் ட்விட்டரில் பதிவு ஒன்றை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். அதில், ``தமிழ் சினிமாவின் மிகப்பெரிய லெஜெண்ட் சிவாஜி கணேசன். சுவரை இவரின் படம் அலங்கரிக்கிறது. என்னுடைய மரியாதையும், புகழையும் அவரது கால்களில் சமர்ப்பிக்கிறேன். அவர் மாஸ்டர். நாம் அவருடைய சீடர்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். அமிதாப் நடிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க