Published:Updated:

இன்று ஒன்று நன்று!

இன்று ஒன்று நன்று!

இன்று ஒன்று நன்று!

இன்று ஒன்று நன்று!

Published:Updated:

விகடன் வாசகர்களுக்கு வணக்கம்...

 ''எல்லாரும் நல்லா இருக்கீங்களா? நான் ரொம்ப நல்லா இருக்கேன்... என்னைப் போலவே நீங்களும் நல்லா இருக்கணும். அதுதான் என் ஆசை!

இன்று ஒன்று நன்று!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எனக்கு நல்லாத் தெரியுது... வித்தியாசம் புரியுது... நான் இளைஞனா ஓடியாடிட்டு இருந்த காலத்தைக் காட்டிலும், இப்போதைய இளைஞர்களுக்குப் பொறுப்பு நிறைய. ஆனா, அதைச் செஞ்சு முடிக்கிறதுக்கான நேரமும் பொறுமையும் கொஞ்சம் குறைச்சல். வீட்டிலும் அலுவலகத்திலும் ஏகத்துக்கும் எகிறி இருக்கு எதிர்பார்ப்பு. ஓடுறான்... ஓடுறான்... ஓடுறான்... வாழ்க்கையின் எல்லையைத் தாண்டியும் ஓடிட்டே இருக்கான். மனுஷனுக்கு நிழல் தரும் மரம், அவனே தன்னை வெட்டி விறகாக்கி எரிக்கும் சமயமும் அவனுக்குக் கதகதப்பு தருது. அப்படித் தனக்கு இரண்டாம் தாயாக இருக்கும் மனைவிக்கு நம் வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தில் ஆரம்பிச்சு, சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவையும் எதுக்கு, எப்படிச் செலவழிக்கணுங்கிறது வரைக்கும் இன்றைய இளைஞர்கள் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. அப்படி நான் என் அனுபவத்தில் அறிஞ்சதை, உணர்ந்து புரிஞ்சுக்கிட்டதை உங்களோடு பகிர்ந்துக்க ஆசைப்படுறேன்.

26-1-12 அன்னைக்கு ஆரம்பிச்சு 01-2-12 வரைக்கும் 044-42890010 என்ற நம்பர்ல என்னைக் கூப்பிடுங்க. சும்மா, ஒரு மூணு நிமிஷம் உங்க காதை என்கிட்ட கொடுங்க. நான் சொல்ல வேண்டியதைப் பளிச்னு சொல்லிடுறேன். என் இத்தனை வருஷ அனுபவம் உங்க மனசுல ஒரு சின்ன இலையை அசைச்சாக்கூட அது போதும் எனக்கு!''

அன்புடன்,
உங்கள் சிவகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism