இலங்கை தமிழ்ச் சேனலில் கால்பதித்த 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி! | Give your support to my new journey says vijayasarathi

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:19:10 (06/04/2019)

இலங்கை தமிழ்ச் சேனலில் கால்பதித்த 'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி!

'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதியை  மறந்திருக்க முடியாது.  சன் தொலைகாட்சியின் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சி அது. அவர் ஊர் ஊராக தொலைக்காட்சி நேயர்களைச் சந்தித்து, அவங்களுக்கு விருப்பமான பாடல் கேட்டுத் தொகுத்து வழங்கியவர். அவருடைய பின் நோக்கி நடக்கும் ஸ்டைல் பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. அவருடைய குரலும் அதற்குத் தகுந்தாற்போல் தனித்திருந்தது.

விஜய சாரதி

கிட்டத்தட்ட, இப்போது இருக்கும் தொகுப்பாளர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் என்றுகூடச் சொல்லலாம். இது மட்டுமல்லாமல் சீரியல்களிலும் ஒரு ரவுண்ட் வந்தவர். கோலங்கள், மூன்று முடிச்சு' என சீரியல்களிலும் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார். அதன் பிறகு, 'சைத்தான்'  போன்ற ஒருசில படங்களில் நடித்தவர். சன் டி.வியின் 'நெட்வொர்க்கின்' சேனல் ஹெட்டாக இருந்தார்.

அதிலிருந்து விலகிய விஜய சாரதி, பிறகு, சன் டி.வி-யில் காலை ஒளிபரப்பான 'வணக்கம் தமிழாவின் நிகழ்ச்சிக்கான தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தற்போது இலங்கையில் இருக்கிறார். என்ன திடீரென இலங்கையில் என போனில் அழைத்து விசாரித்தால்,  ''சமீபத்தில்தான் இங்கு ஜாயின் பண்ணேன். இலங்கையின் நம்பர் 1 தமிழ் சேனலான 'சக்தி' சேனலின் தலைமைப் பொறுப்பில் இணைந்துள்ளேன். 1998-ம் ஆண்டிலிருந்து இயங்கிவருகிறது இந்த சேனல். இதில் சினிமா, சீரியல் என அனைத்து விதமான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுவருகின்றன. 

என்னால் இதில் என்ன புதுமையக் கொண்டுவர முடியுமோ, அதற்கான முயற்சியில் இருக்கிறேன். பல ஊர்களைச் சுற்றியிருக்கிறேன். அதனால், எனக்கு இலங்கை புதிதாகத் தெரியவில்லை. எல்லோரும் நம் மக்களே. தமிழ்மக்களின் பேராதரவை எப்போதும் தருவீர்கள் என நம்புகிறேன்'' என்கிறார் விஜயசாரதி, அதே மாறாத புன்னகையோடு. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க