`என்னுடைய கேரக்டரை வீட்டுல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டாங்க!'- 'சூப்பர் டீலக்ஸ்' ரெங்கராஜன் | Actor renga says about that movie renga

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (04/04/2019)

கடைசி தொடர்பு:18:29 (04/04/2019)

`என்னுடைய கேரக்டரை வீட்டுல பார்த்துட்டு அதிர்ச்சியாயிட்டாங்க!'- 'சூப்பர் டீலக்ஸ்' ரெங்கராஜன்

'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் நடித்த சமந்தாவின் காதலர் கேரக்டர், எல்லோரையும் கவர்ந்த கதாபாத்திரம். படத்தில், 'டெடி பாடி' கேரக்டரில் நடித்திருக்கும் ரெங்கராஜன் ராஜகோபாலனிடம் பேசினோம். 'படத்தில் நடித்த காட்சிகளிலிருந்து இன்னும் மீளவே இல்லை' என்று என்ட்ரி கொடுத்தார் ரெங்கா. 

சூப்பர் டீலக்ஸ்

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சி. ப்ளஸ் ஒன் படிக்கிறப்போ சென்னை வந்துட்டேன். காலேஜ் முடிச்சிட்டு, இப்போ ஐ.டி கம்பெனியில வொர்க் பண்ணிட்டிருக்கேன். சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்போ என்னோட ஆசை நிறைவேற்றிருச்சு. அதுக்கு முதல் காரணம், இயக்குநர் குமாரராஜன் அண்ணாதான். நானும் அவரும் சென்னையில ஒரே ஏரியா. என்னோட சீனியர் அண்ணாக்கள் பலரும் குமாரராஜன் அண்ணாவுடைய நண்பர்கள். அவருடனான அறிமுகம் எனக்கு இவர்கள் மூலமாதான் ஏற்பட்டுச்சு. 

'ஏதாவது படத்துல நடிக்க வாய்ப்பு இருந்தா சொல்லுங்க'ன்னு குமாரராஜன் அண்ணாகிட்ட கேட்டிருந்தேன். அவர் கொடுத்த வாய்ப்புதான் 'சூப்பர் டீலக்ஸ்' படம். இந்தப் படத்துல நடிச்சிருக்கிற அஞ்சு பசங்கள்ல ஒரு பையனா நடிக்கிறதாதான் முதலில் இருந்தது. அப்புறம் சார், சமந்தா மேடத்தோட லவ்வர் கேரக்டர் கொடுத்திட்டார். 'ஹேர் கட் எதுவும் பண்ணாத'னு மட்டும் டைரக்டர் சார் சொல்லியிருந்தார். நல்லா ஹேர் வளர்த்தேன். முடி மட்டும் இருந்துட்டு தாடி இல்லனா பாகவதர் மாதிரி இருக்குமோனு தோணுச்சு. அதனால தாடியும் சேர்த்து வளர்த்துட்டேன். சாருக்கும் என் கெட்டப் பிடிச்சிருந்தது. 

ரெங்கா

முதல் நாள் ஷூட்டிங் போது படத்துல நடிக்கப்போறோம்னு ஜாலியா ஃபீல் பண்ணினேன்.  அப்புறம் ரொம்பப் பயந்துட்டேன். பதற்றமா இருந்தது. சமந்தா மேடம் நடிப்பு பிடிக்கும். நல்ல நடிகை. பல முன்னணி ஹீரோக்கள்கூட நடிச்சவங்க. அவங்க என்கூட சேர்ந்து நடிக்குறேன்னு சொன்னதே பெரிய விஷயம். அவங்களுடைய சினிமா கேரியரில் நான் ரொம்ப சின்னப் புள்ளி. இது, அவங்களோட பெருந்தன்மை. பகத் சார், சமந்தா மேடம்கூட நடிச்சது பெரிய அனுபவமா இருந்தது. படத்தோட முதல் காட்சியில இருந்து இன்னும் மீண்டு வரல. இவங்க ரெண்டு பேரும் நிறைய விஷயங்கள் ஷாட்ல சொல்லிக்கொடுத்தாங்க. என்னால டேக் ஓகே ஆக நிறைய நேரம் எடுத்தாலும் பொறுமையா இருப்பாங்க. வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய நல்ல விஷயம், இந்தப் படம். தவிர, பகத் சாருடைய மிகப்பெரிய ரசிகன் நான். 

சூப்பர் டீலக்ஸ் ரெங்கா

இந்தப் படத்துல கமிட் ஆனவுடனே, வீட்டுல, நண்பர்கள் எல்லோரும், 'என்ன ரோல்லில் நடிச்சிருக்கே'னு கேட்டாங்க.  ஆனா, நான் யார்க்கிட்டயும் சொல்லல. என்னோட கேரக்டரை படத்துல பார்த்தவுடனே, வீட்டுல ரொம்ப அதிர்ச்சியானாங்க. மூச்சு விடமா நிறைய காட்சிகளில் நடிச்சிருப்பேன். இதுக்கு கஷ்டப்பட்டு , சிரமப்பட்டு நடிச்சேன்னு சொல்ல மாட்டேன். ஏன்னா, எப்படி நடிக்கணும்னு குமாரராஜன் சார் சொல்லிக்கொடுத்தார். கண்ணைத் திறந்துட்டு எப்படி மேலே பார்க்குறதுனு படத்தோட உதவி இயக்குநர்கள் சொல்லிக் கொடுத்தாங்க. நான் நல்லா நடிச்சதுக்கு அவங்களும் காரணம். அதே மாதிரி, படத்துல என்னோட கேரக்டரைப் பார்த்துட்டு என்னோட ஃப்ரெண்ட்ஸ், 'மகளிர் மட்டும்' படத்துல வர்ற நாகேஷ் சார் கேரக்டரை ஞாபகப்படுத்துச்சுனு சொன்னாங்க. அவர் பெரிய லெஜன்ட். அவரோட என்னை கம்பேர் பண்றது சரியா இருக்காதுனு சொன்னேன். இந்தப் படம் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்திருக்கிறது  சந்தோஷமா இருக்கு'' என்று மகிழ்ச்சியாக முடித்தார், ரெங்கராஜன் ராஜகோபாலன். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க