`நானும், அஞ்சலியும் செய்த அலப்பறைகள்!'' - நாடோடிகள் 2' ஷூட்டிங் ஸ்பாட் குறித்து அதுல்யா ரவி | What we were in shooting spot actress Athulya ravi reveals the shooting experience!

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/04/2019)

கடைசி தொடர்பு:14:30 (05/04/2019)

`நானும், அஞ்சலியும் செய்த அலப்பறைகள்!'' - நாடோடிகள் 2' ஷூட்டிங் ஸ்பாட் குறித்து அதுல்யா ரவி

அதுல்யா

`நாடோடிகள் 2', `சாட்டை 2' என வரிசையாக ஐந்து படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார் அதுல்யா ரவி. `காதல் கண் கட்டுதே' படத்தின் வாயிலாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். அதன் பிறகு `ஏமாளி' என்ற படத்தில் நடித்திருந்தார். கூடிய விரைவில் `நாடோடிகள் 2' வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அஞ்சலியுடன் அதுல்யாவும் இணைந்து நடித்துள்ளார். அதுல்யாவும், அஞ்சலியும் எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் `பெட்'டாக இருப்பார்களாம். 

அதுல்யா

மேலும், அதுல்யா, அஞ்சலியுடன் இருக்கும் படங்களை அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அவர்களுடைய நட்பு பற்றி அதுல்யாவிடம் கேட்டால், ``நாங்க இரண்டு பேரும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் சந்தித்தோம். அதன் பிறகு பேச ஆரம்பித்து இதோ இப்போது டீப் ஃப்ரண்ட்ஷிப்பாக மாறியிருக்கிறது. நானும், அவரும் `நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறோம். அதற்கான ஷூட்டிங் சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்தது. அந்த ஊர் எங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஸ்பாட்டாக மாறிடுச்சு.

அதுல்யா

அதனால் ஷூட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் இரண்டு பேரும் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருப்போம். என்னுடைய பெஸ்டி அஞ்சலி கூட இருக்கும் நேரங்கள் நிஜமாகவே சந்தோஷ தருணங்கள்தான். எங்க ஃப்ரண்ட்ஷிப் மீது கண் வச்சுடாதீங்க'' என்றவரிடம், `நாடோடிகள் 2' படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ``ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில்தான் நடிக்கிறேன். ஆனால், அந்தக் கதாபாத்திரம் பற்றிச் சொல்லமாட்டேனே. படம் வந்ததும் பார்த்துட்டு உங்க ஃபீட் பேக்கைக் கொடுங்க' எனக் கண்கள் சிமிட்டி சிரிக்கிறார் இந்தச் சிரிப்பழகி அதுல்யா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க