ஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி! - ஹீரோயின் யார் தெரியுமா?  | vijay devarakonda's brother enter into cinema

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/04/2019)

கடைசி தொடர்பு:20:00 (05/04/2019)

ஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி! - ஹீரோயின் யார் தெரியுமா? 

`பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து, `அர்ஜுன் ரெட்டி', `கீதா கோவிந்தம்', `நோட்டா', `டாக்ஸிவாலா' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்தளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாக `அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரது நடிப்பில் `டியர் காம்ரேட்' படம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.

விஜய் தேவரக்கொண்டா

இவரைத் தொடர்ந்து, இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் `தொராசனி' எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். கே.வி.ஆர் மகேந்திரா என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிகர் ராஜசேகரின் இளையமகள் சிவாத்மிகா நடிக்கிறார். அவருக்கும் இதுதான் முதல் படம். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆனந்த் தேவரகொண்டாவுக்கும் சிவாத்மிகாவுக்குமான காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க