ராஜமெளலியின் `ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து விலகிய வெளிநாட்டு நடிகை! | important celebrity quits rajamouli's RRR project

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:13:00 (06/04/2019)

ராஜமெளலியின் `ஆர்ஆர்ஆர்’ படத்திலிருந்து விலகிய வெளிநாட்டு நடிகை!

`பாகுபலி 2' படத்துக்குப் பிறகு இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் 'RRR' படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹீரோயினே இல்லாமல் நிறைவுபெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியா பட், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் ஆகியோர் ஒப்பந்தமாக இருந்தனர்.

டெய்ஸி எட்கர் ஜோன்ஸ்

தவிர, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் அடுத்த ஷெட்யூலை வதோதராவில் தொடங்கவிருந்த நிலையில், ராம் சரணுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இதன் படப்பிடிப்பு மூன்று வாரங்கள் கழித்து தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ், சில காரணங்களால் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதைப் படக்குழு ட்விட்டரில் உறுதி செய்துள்ளது. அதனால், அந்த கேரக்டரில் நடிக்க வேறொருவரை தேர்ந்தெடுக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. 

ராஜமெளலி படம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க