துரை செந்தில்குமார், தனுஷ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு! | Director durai senthilkumar, dhanshu movie finished first schdule

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (07/04/2019)

கடைசி தொடர்பு:06:30 (07/04/2019)

துரை செந்தில்குமார், தனுஷ் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு!

'கொடி' பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி கொண்டிருக்கும் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷூக்கு டபுள் ரோல் எனத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றனர். படத்தில் ஒரு ஹீரோயினாக நடிகை சினேகா கமிட் ஆகியிருக்கிறார். இன்னொரு கதாநாயகி யார் என்று தெரியாத நிலையில் திருடன் கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தனுஷ்

குற்றாலத்தில் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ள நிலையில்,  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளராக விவேக் மெர்வின் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படம் தவிர இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன் ' படத்திலும் தனுஷ் நடித்து கொண்டிருக்கிறார். மேலும், இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் கமிட் ஆகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனுஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க