Published:Updated:

பத்து டு பத்து பசப்புகழ் பாடப்ப்டும்!

கே.ராஜாதிருவேங்கடம்

பத்து டு பத்து பசப்புகழ் பாடப்ப்டும்!

கே.ராஜாதிருவேங்கடம்

Published:Updated:
##~##

''ரொம்ப நாளாத் தப்பிச்சிட்டு இருந்தேன். இன்னைக்கு மாட்டிக்கிட்டேன்!'' - 'அகில உலக சூப்பர் ஸ்டார்’ சிவா.

 ''கடலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன்!''- மக்கள் டி.வி. ஆர்த்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' புதுக் கட்சி ஆரம்பிச்சிருக்கேன். அதுக்காகத்தான் பேட்டி எடுக்க போன் பண்றீங்களோனு நினைச்சேன்..!'' - தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன்.

''ஏன் என்கிட்ட கேக்குறீங்க... பதில் தெரியலைன்னா, கலாய்ப்பீங்களா££££..?'' - 'லொள்ளு சபா’ மனோகர்.

''ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் கேரளாவுல எங்க வீட்டுல சாப்பிட்டு நிம்மதியாத் தூங்க ஆரம்பிச்சேன். எழுப்பிட்டீங்களே..!'' - நடிகை பானு.

'நண்பன்’ படத்தில் விஞ்ஞானி விஜய்யின் பெயர் என்ன?

விடை: கொசக்ஸி பசப்புகழ்

பத்து டு பத்து பசப்புகழ் பாடப்ப்டும்!

சிவா: ''கிரிக்கெட் மேட்ச்ல பிஸியா இருக்கிறதால, இன்னும் படம் பார்க்கலஜி. பார்த்துட்டு ஃபர்ஸ்ட் போன் உங்களுக்குத் தான்!''

ஆர்த்தி: ''சென்னைக்கு வந்துதான் படம் பார்க்கணும். எப்படி இருந்தாலும் நண்பேன்டா!''

வேல்முருகன்: ''சினிமா பத்தி அதிகமாத் தெரியாதுங்க. யாராவது நல்லா இருக்குனு சொன்னா மட்டும் போவேன்!''

மனோகர்: '' 'நண்பன்’ படம் நான் பாக்கலியே... அதுல இளைய தளபதி விஞ்ஞானியா நடிச்சிருக் காரா என்ன? சூப்பரப்பு!''

பானு: ''அச்சோ... நான் தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சே!''

இந்த ஆண்டு கொண்டாடப்படவிருப்பது இந்தியா வின் எத்தனையாவது குடியரசு தினம்?

விடை: 63

சிவா: ''இதுல எல்லாம் விளையாட்டா இருக்கக் கூடாது. இருங்க, கரெக்டா கணக்குப் போட்டுச் சொல்றேன். 63... கரெக்ட்தானே!''

ஆர்த்தி: ''அறுபத்தி ரெண்டா... மூணா? கொழப்பமா இருக்குங்க!''

வேல்முருகன்: ''தொடக்கத்தை எடுத்துக்கிறதா... முடிவை எடுத்துக்கிறதானு தெரியல. தப்பா சொல்லி சிக்கலாகிடக் கூடாது. 61, 62, 63. இது மூணுக்குள்ளதான் ஏதோ ஒண்ணு. டைரி பார்த் துட்டு சொல்லவா?''

மனோகர்: ''குடியரசு தினமா? 52-வது வருசம். எல்லோருக்கும் வாழ்த்து சொன்னேன்னு போட்டு விட்ருங்க!''

பானு: ''ரிபப்ளிக் டே ஜனவரி 26 தெரியும். ஆனா, எத்தனாவதுனு யாரும் சொல்லிக்கொடுக்கலையே!''

பத்து டு பத்து பசப்புகழ் பாடப்ப்டும்!

'வொய் திஸ் கொலவெறி’ பாடலைத் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்த எந்தக் கட்சி திட்டமிட்டு உள்ளது?

விடை: காங்கிரஸ்

சிவா: ''ஆஸ்திரேலியாவுல இருக்கிற ஒரு கட்சி இந்தப் பாட்டை தங்களோட கட்சிப் பாட்டா பயன்படுத்திட்டு இருக்காங்களாம். உலகம் முழுக்க இனி ஒரே கொலைவெறிதான்!''

ஆர்த்தி: ''தி.மு.க-தான். அவங்கதான் பயன்படுத்தப் போறதா சொன்னாங்க!''

வேல்முருகன்: ''காங்கிரஸ் கட்சி. பி.ஜே.பி-யும் பயன்படுத்த ஆலோசனை பண்ணிக்கிட்டு இருக்காங்களாம். நாடு எப்படிக் குட்டிச்சுவராப்போகுது பாருங்க!''

மனோகர்: ''ஆங்... இந்தியா தமிழ்நாடு கட்சி! நான் நடிச்சிட்டு இருக்கிற மன்னாரு படத்துல, 'மன்னாரு... மன்னாரு’னு ஒரு பாட்டு வருது பாருங்க. அப்புறம் எல்லாக் கட்சியும் அந்தப் பாட்டைத்தான் பயன்படுத்துவாங்க!''

பானு: ''அப்படியா... இது நல்லா இருக்கே! எந்தக் கட்சியா இருந்தாலும் சூப்பர்!''

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடை எத்தனை மணிக்குத் திறக்கப்படும்... எத்தனை மணிக்கு மூடப்படும்?

விடை: காலை 10... இரவு 10.

சிவா: ''காலையில அஞ்சு மணிக்குக்கூட டாஸ்மாக் வாசல்ல கூட்டத்தைப் பார்த்திருக்கேன். ஆனா, ரூல்ஸ் படி 9 டு 9னு நினைக்கிறேன்!''

ஆர்த்தி: '' இதெல்லாம் என்கிட்ட நீங்க கேட்டே இருக்கக் கூடாது!''

வேல்முருகன்: ''காலையில 10 மணிக்குத் திறந்து ராத்திரி 9 மணிக்கு மூடணும் என்பது ரூல். ஆனா, விடிய விடியத் திறந்துவெச்சிக் குடிச்சிட்டு இருக்காங்க!''

மனோகர்: ''காலைல 9 மணிக்குத் திறந்தா... ராத்திரி 9 மணிக்கு பாட்டில் மூடுவாங்க நண்பா!''

பானு: ''ஒயின் ஷாப்தானே... காலையில 8-30 மணிக்குத் திறந்து ராத்திரி 9 மணிக்கு க்ளோஸ் பண்ணுவாங்க. ஆமா, வழக்கமா எல்லாக் கடையும் அப்படித்தானே பண்ணுவாங்க!''

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு ரூபாய்?

விடை: 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு முதல் 50 யூனிட்களுக்கு 65 பைசாவும், 51-வது யூனிட்டில் இருந்து 100 யூனிட் வரை 75 பைசாவும் வசூலிக்கப்படுகிறது. அதுவே 100 யூனிட்களுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்குப் பின்வருமாறு கட்டணம் வசூலிக்கப்படும். 1 முதல் 50 யூனிட்கள் - 75 பைசா. 51 முதல் 100 யூனிட்கள் - 85 பைசா. 101 முதல் 200 யூனிட்கள் - 1.50 பைசா. 201 முதல் 600 யூனிட்கள் - 2.20 பைசா. 601-க்கு மேல் 3.05 பைசா.  

சிவா: ''என்னங்க இது... மின்சார வாரியமே இந்த சிவாவோடது. அதுல போய் யூனிட் கணக்கெல்லாம் கேட்டுக்கிட்டு!''

ஆர்த்தி: ''ஒரு யூனிட்டுக்கு ஒண்ணே கால் ரூபாய்!''

வேல்முருகன்: ''விவசாயிகளுக்கு ஒரு கட்டணம், பணக்காரங்களுக்கு ஒரு கட்டணம்னு பிரிச்சிவெச்சிருக்காங்க. அதுல நிறையக் குழப்பம் இருக் குங்க!''

மனோகர்: ''ஒரு யூனிட்டுக்கு 75 பைசா. 100 யூனிட்டுக்கு மேல போனா ரேட் மாறும்!''

பானு: ''கரன்ட் பில் தெரியும். ஆனா, அதை எப்படிப் பிரிச்சிக் கொடுப்பாங்கனு தெரியாது!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism