வெப் சீரிஸில் களமிறங்கினார் நடிகை அமலா! | amala akhineni to act in web series

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (08/04/2019)

கடைசி தொடர்பு:13:50 (08/04/2019)

வெப் சீரிஸில் களமிறங்கினார் நடிகை அமலா!

நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியும், 80-களின் ஆதர்ஷ கதாநாயகியுமான நடிகை அமலா, வெப் சீரிஸில் நாயகியாக நடித்துவருகிறார்.

அமலா

'மெல்லத் திறந்தது கதவு', 'வேலைக்காரன்', 'சத்யா' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகை அமலா. 90-களின் ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் நடித்த அமலா, அதன்பின் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் மட்டும் நடித்துவந்தார். சில வருடங்களுக்கு முன், 'உயிர்மை' தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டிய அமலா, நீண்ட நாள்களுக்குப் பிறகு  ஜீ5 தளத்தில் 'ஹை ப்ரீஸ்டஸ்' என்ற தொடரில் நடிக்க உள்ளார். தெலுங்கில் உருவாகியுள்ள இந்தத் தொடரை தமிழில் 'அலிபாபா', 'கழுகு' உள்ளிட்ட படங்களில் நடித்த  நடிகர் கிருஷ்ணா தயாரிக்கிறார். 

High priestess

கிருஷ்ணாவின் 'ட்ரைபல் ஹார்ஸ் என்டர்டெயின்மென்ட்' என்ற நிறுவனத்தின் சார்பில் தயாராகியுள்ள இந்த வெப் சீரீஸ், வரும் ஏப்ரல் 25 முதல் ZEE5 வலைதளத்தில் ஒளிபரப்பாகிறது. இதில், நடிகர் கிஷோர், பிரம்மாஜி, வரலக்ஷ்மி சரத்குமார், சுனைனா, விஜயலட்சுமி, ஆதவ் கண்ணதாசன், பிக் பாஸ் நந்தினி ராய், ஜி.வி.பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.