`ஜெ. கேரக்டரில் கஜோல்; சசிகலா கேரக்டரில் அமலாபால்!'-பேசிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் விளக்கம் | Director jagadishwara reddy says about jayalalitha biobic

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:15 (08/04/2019)

`ஜெ. கேரக்டரில் கஜோல்; சசிகலா கேரக்டரில் அமலாபால்!'-பேசிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் விளக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க தமிழில் பல இயக்குநர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் `தலைவி' படத்துக்காக ஜெயலலிதா ரோலில் நடிக்க பாலிவுட் நடிகை கங்கனாவை கமிட் செய்தார். இந்த நிலையில், தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவர் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை 'சசிலலிதா' என்ற பெயரில் எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். இதுகுறித்து ஜெகதீஸ்வர ரெட்டியிடம் பேசினேன். 

தயாரிப்பாளர் ஜெகதீஸ்வர ரெட்டி

``எனக்கு ஜெயலலிதாவ பிடிக்கும். அவர், சிறந்த நிர்வாகி. அவருடைய இறப்பு என்னை வெகுவாகப் பாதித்தது. அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றி படிச்சிட்டு இருக்கேன். ஜெயலலிதாவின் வாழ்க்கையை சசிகலாவை விட்டுட்டுப் பார்க்க முடியாது. அதனாலதான் படத்துக்கு `சசிலலிதா'ன்னு பேர் வெச்சேன். எனக்கு சசிகலாவைவிட ஜெயலலிதாதான் பிடிக்கும். படத்தில் நடிக்கக்கூடிய நாயகிகளை இன்னும் தேர்வு செய்யல. சீக்கிரம் ஷூட்டிங் ஆரம்பிச்சிருவோம். ஜெயலலிதாவின் மரணம் சம்பந்தமான கேள்விகள் என் மனதிலும் இருக்கு. இது எல்லாவற்றுக்கும் பதிலை என்னுடைய படத்தில் பார்க்கலாம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக எடுக்க யாரிடமும் ரைட்ஸ் கேட்கணும்ங்கிற அவசியம்கூட இல்லை. ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க கஜோலிடமும், சசிகலா கேரக்டரில் நடிக்க அமலாபாலிடமும் பேசிக்கொண்டிருக்கிறேன்.'' என்றவரிடம், 

சசிலலிதா

`என்.டி.ஆர்' வாழ்க்கையை படமா எடுத்தீர்களே, ஏன் இன்னும் வெளியாகவில்லை என்ற கேள்வியைக் கேட்டால், ``இப்போது தேர்தல் பிஸியில் எல்லோரும் இருக்காங்க. அதனால், தேர்தல் முடிந்தவுடனே படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க