ஜெயலலிதாவுக்கு `நோ'; இந்திராகாந்திக்கு `யெஸ்' சொன்ன பாலிவுட் நடிகை! | reason why vidya balan rejected jayalalitha biopic and accepted to do indra gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (08/04/2019)

கடைசி தொடர்பு:16:45 (08/04/2019)

ஜெயலலிதாவுக்கு `நோ'; இந்திராகாந்திக்கு `யெஸ்' சொன்ன பாலிவுட் நடிகை!

ஜெயலலிதாவாக நடிக்க `நோ' சொன்ன வித்யாபாலன் தற்போது இந்திராகாந்தியாக நடிக்கவுள்ளார். 

வித்யாபாலன்

ஏ.எல் விஜய் இயக்கும் `தலைவி' படத்தில் பாலிவுட் நடிகையும் தமிழில் அஜித்குமாரின் `நேர்கொண்ட பார்வை' மூலம் அறிமுகமாகும் வித்யா பாலன் நடிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், அவரது கால்ஷீட் உரிய நேரத்தில் கிடைக்காததால் தற்போது, `தாம்தூம்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதைப் படக்குழு அதிகாரபூர்வமாகவும் அண்மையில் வெளியிட்டது.  அவருக்கு 24 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கும் நடிகைக்குக் கொடுக்கப்படும் அதிகமான சம்பளம் இது. 

வித்யாபாலன்

இந்த நிலையில், வித்யாபாலன் தன் கணவர் சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கும் ஆன்லைன் தொடரில் முன்னாள் பிரதமரும், நேருவின் மகளுமான இந்திரா காந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன் காரணமாகவே இந்த வாய்ப்பை மறுத்துள்ளதாகவும் தற்போது தெரிவித்துள்ளார். வித்யா, இந்திரா காந்தியின் அரசியலையும் மனோ திடத்தையும் பற்றி பெரிதும் ஆராய்ந்து வருவதாக வித்யாவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டையே உலுக்கிய எமர்ஜென்சி, மிசா, ஆப்ரேஷன் ப்ளு ஸ்டார் போன்ற சம்பவங்களைச் சுற்றி கதைக் களம் உருவாக்கப்பட்டுள்ளது.