Published:Updated:

ஹோமாய் நிரந்திர மெளனம்!

கவின்மலர்

ஹோமாய் நிரந்திர மெளனம்!

கவின்மலர்

Published:Updated:
##~##

ஹோமாய் வியாரவல்லா... இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட். 98 வயதில் தனிமையில் இருந்தபோது அவர் உயிர் பிரிந்திருக்கிறது!  

 சுதந்திர இந்தியாவில், செங்கோட்டையில் நடந்த முதல் கொடியேற்றத்தைப் படம் பிடித்தவர் ஹோமாய். இந்திரா காந்தி தன் தந்தை நேருவுடன் இருந்த தருணங் கள், நேரு மற்றும் லால்பக தூர் சாஸ்திரியின் இறுதி நிமிடங்கள், இரண்டாம் உலகப் போருக்கான தயாரிப்புகள், ஜாக்குலின் கென்னடியின் இந்திய வருகை, 1956-ல் தலாய் லாமாவின் முதல் இந்திய வருகை, பாகிஸ்தான் பிரிவி னைக்கு ஒப்புதல் அளித்த காங்கிரஸ் கூட்டம், மவுன்ட் பேட்டன் கவர்னர் ஜெனரலாகப் பதவியேற்ற தருணம், பிரதமர் பதவியேற்ற பின் நேரு நிகழ்த்திய உரை, வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய வருகைகள் என்று இவர் இந்தியாவின் பல வரலாற்றுச் சம்பவங்களுக்கு வாழும் சாட்சியாக இருந்தவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹோமாய் நிரந்திர மெளனம்!

இவருடைய பெரும்பாலான கறுப்பு-வெள்ளைப் படங்களில் நேருவே பிரதானம். பிரிட்டிஷ் ஹை கமிஷனரின் மனைவிக்கு நேரு சிகரெட் பற்றவைக்கும்போது ஹோமாய் எடுத்த படம் மிகப் பிரபலமானது. பெண்களைப் பள்ளிக்குக்கூட அனுப்பாத அந்தக் காலத்திலேயே ஹோமாய், மும்பையின் புகழ்பெற்ற ஜே.ஜே.காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் பெயின்ட்டிங்கில் பட்டயப் படிப்பை முடித்தார். ஹோமாய் காதலித்து மணந்த மானெக்‌ஷாவும் ஒரு புகைப்படக் கலைஞர். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் பணியாற்றி வந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் நொடியில் இருந்து தலைவர்களைக் கூடவே இருந்து படம் எடுத்த ஹோமாய், மகாத்மா காந்தியின் இறுதி நொடிகளைப் படம் பிடிக்கவில்லை. அதுவே அவரது வாழ்நாள்

ஹோமாய் நிரந்திர மெளனம்!

வருத்தம்! காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று காலை அவரது ஆசிரமக் கூட்டத்தைப் பதிவுசெய்வதற்காகக் கிளம்பிவிட்டார் ஹோமாய். பாதி தூரத் தில் அவரைப் பார்த்த கணவர் மானெக்‌ஷா, 'நாளை இருவரும் சேர்ந்துபோவோம். நான் வீடியோ எடுக்கிறேன். நீ போட்டோ எடு!’ என்று சொல்லவும் வீட்டிலேயே தங்கிவிட்டார் ஹோமாய். அடுத்த ஒரு மணி நேரத் தில் காந்தி இறந்துவிட்டார். ''நான் அங்கே இருந்திருக்க வேண்டியவள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த வாய்ப்பைத் தவறவிட்டேன்!' என்று வருந்துகிறார்.

அதை ஈடுசெய்யும் வண்ணம், காந்தியின் அஸ்தி யைக் கரைப்பதற்காக ரயிலில் கொண்டுசென்ற போது அவர் எடுத்த படங்கள் சாகாவரம்பெற்றவை. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் காந்தியின் அஸ்தியைக் காணக் குவிந்த பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட்டத்தையும் அவர்களது உணர்வுகளையும் படங்களாகப் பதிவு செய்தார். அந்தப் படங்கள் இன்றைக்கும் பேசுகின்றன!

ஹோமாய் நிரந்திர மெளனம்!

இந்தியாவின் முதல் பெண் போட்டோ ஜர்னலிஸ்ட் என்னும் ஒளிவட்டத்தோடு அவர் வாழவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது வாழ்க்கை வரலாற்று நூல் (India in Focus: Camera Chronicles of Homai Vyarawalla) வெளியானபோதுதான் அவரை மீடியா கண்டுகொண்டது. பெரும்பாலும் தனியாகவே பொழுதைக் கழித்தார். அவர் வாழ்ந்த வடோதரா நகரில் ஒன்றிரண்டு பக்கத்து வீட்டாரைத் தவிர, அவரை யாருக் கும் தெரிந்திருக்கவில்லை. நண்பர்கள் அற்றுப்போன ஒரு வாழ்க்கையில், யாருக்காக, எதற்காகச் சேர்த்துவைக்க வேண்டும் என்று எண்ணி, தான் எடுத்த முக்கியமான படங்களை எல்லாம் வீசி எறிந்துவிட்டார். தனது இறுதிக் காலத்தில் அதுகுறித்து மிகவும் வருந்தினார் ஹோமாய்.

பலருக்கு முன்னோடியாக வாழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சரியான முறையில் பதிவுசெய்யாமல் விட்டுவிட்ட குற்றவுணர்வு இப்போது மீடியாக்களுக்கு வந்திருக்கிறது. 'நான் தனியாக வாழப் பழகிக்கொண்டேன். எவரையும் சார்ந்துஇருக்காமல் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. நான் இப்போதெல்லாம் யாரிடமும் பேசுவது இல்லை. பெரும்பாலும் மௌனம்தான். சில சமயம் மூன்று வாரங்கள் வரைகூட யாரிடமும் பேசாமல் இருந்திருக்கிறேன். பேசக் கூடாது என்றில்லை. பேசுவதற்கு ஆட்களோ, அதற்கான தேவையோ இல்லாமல் இருந்தது!’ என்று தனது நூலில் கூறியிருக்கிறார் ஹோமாய். நிரந்தரமானதொரு மௌனத்தைத் தனதாக்கிக்கொண்ட ஹோமாய், இனி ஒருபோதும் பேசப் போவது இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism