`நீங்க கண்டுபிடிச்சே ஆகணும்!' - ஃபகத் ஃபாசில், சாய் பல்லவியின் `அதிரன்' டிரெய்லர் | Fahadh's 'Athiran' trailer is out

வெளியிடப்பட்ட நேரம்: 18:34 (08/04/2019)

கடைசி தொடர்பு:18:34 (08/04/2019)

`நீங்க கண்டுபிடிச்சே ஆகணும்!' - ஃபகத் ஃபாசில், சாய் பல்லவியின் `அதிரன்' டிரெய்லர்

ஃபகத் ஃபாசில், சாய் பல்லவி நடித்திருக்கும் `அதிரன்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஃபகத் ஃபாசில், சாய் பல்லவி

புதுமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் படம் `அதிரன்'. த்ரில்லர் ஜானரில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் அவர் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் சாய் பல்லவிக்கு இது 3-வது படமாகும்.

ஃபகத் ஃபாசில்

சென்சுரி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்குப் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்திருக்கிறார். பாடல்களை பி.எஸ்.ஜெயஹரி எனும் புதுமுக இசையமைப்பாளர் கம்ப்போஸ் செய்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், அதுல் குல்கர்னி, ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் `அதிரன்' படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

சாய் பல்லவி

வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற `கும்மளங்கி நைட்ஸ்' படத்துக்குப் பின்னர் `அதிரன்' படத்தில் நடித்திருக்கும் ஃபகத் ஃபாசில், மருத்துவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.