எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெய்! | sa chandrasekar directs actor jai

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:20:30 (08/04/2019)

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கிறார் ஜெய்!

`ஜருகண்டி' படத்துக்குப் பிறகு, `அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஒரு படம், அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் `பிரேக்கிங் நியூஸ்', மலையாளத்தில் மம்மூட்டியுடன் 'மதுரராஜா' என பிஸியாக இருக்கிறார், நடிகர் ஜெய். தவிர, `பார்ட்டி', `நீயா 2' ஆகிய படங்களின் ஷூட்டிங் நிறைவுபெற்று திரைக்கு வரத் தயாராக இருக்கிறது.

ஜெய்

இந்த நிலையில், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்திலும் நடிக்க இருக்கிறார். 2016-ம் ஆண்டு வெளியான `டூரிங் டாக்கீஸ்' படத்துக்குப் பிறகு, எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்து இயக்கவிருக்கும் படம் இது. இதற்கு நடுவில் `கொடி', `டிராஃபிக் ராமசாமி' உள்ளிட்ட படங்களில் நடிக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இயக்கும் இந்தப் படத்தில் ஒரு சோஷியல் மெசேஜையும் சொல்லவிருக்கிறார்களாம். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க