ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது! | rajini new movie poster will release in tomorrow morning

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (08/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (08/04/2019)

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது!

'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற போட்டோ ஒன்று வெளியானது. இதனால், இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் கேரக்டரில் நடிக்கிறார் என்பது போன்ற தகவல்கள் இணையத்தில் பரவியது. ஆனால், படக்குழு இதை உறுதிப்படுத்தவில்லை. 

ரஜினி

இந்த நிலையில், படத்தின் ஹீரோயினாக நயன்தாராவிடம் பேசப்பட்டுள்ளதாக ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் ட்விட்டரில் அறிவித்திருந்தார். வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், ரஜினியின் மகள் கேரக்டரில் நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. மேலும், 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து இதற்கும் அனிருத் இசையமைக்க சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதற்கிடையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 8.30 மணிக்கு வெளியிடப்படும் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை லைகா  நிறுவனம் தயாரிக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க