`அர்ஜூன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக் கபீர் சிங் டீசர்! | arjun reddy movie hindi remake teaser release

வெளியிடப்பட்ட நேரம்: 22:01 (08/04/2019)

கடைசி தொடர்பு:22:01 (08/04/2019)

`அர்ஜூன் ரெட்டி' படத்தின் இந்தி ரீமேக் கபீர் சிங் டீசர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான திரைப்படம் `அர்ஜூன் ரெட்டி'. ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்த இந்தப் படம் தெலுங்கு தேசத்தையும் தாண்டி தமிழிலும் ஹிட் அடித்தது. இதனால், `வர்மா' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் இயக்குநர் பாலா. படத்தின் ஹீரோவாக விக்ரம் மகன் துருவ் நடிக்க படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் வெளியானது. 

அர்ஜூன் ரெட்டி

முழுப் படப்பிடிப்பும் முடிந்த நிலையில் `படம் தாங்கள் எதிர்பார்த்தளவுக்கு வரவில்லை' என்ற தயாரிப்பு நிறுவனம், படத்தை முழுவதுமாக ரீ ஷூட் செய்யப் போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தை ஆச்சர்யப்பட வைத்தது. இந்நிலையில் துருவ் நடிக்க `ஆதித்யா வர்மா' என்ற பெயரில் படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் `அர்ஜூன் ரெட்டி' படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார் இந்தப் படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா. ஷாஹித் கபூர் நடித்திருக்கும் இந்தப் படம் `கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க