இது ரஜினியின் ``தர்பார்”! ரஜினி - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! #Thalaivar167 #Darbar | rajini ar murugadass firstlook launched shoot details inside

வெளியிடப்பட்ட நேரம்: 08:32 (09/04/2019)

கடைசி தொடர்பு:09:06 (09/04/2019)

இது ரஜினியின் ``தர்பார்”! ரஜினி - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! #Thalaivar167 #Darbar

 #ரஜினி167 ஃபர்ஸ்ட் லுக், அதிகாரபூர்வமாக இன்று ரிலீஸானது.

தர்பார்

'பேட்ட',  'சர்கார்' படங்களுக்கு முன்பே ரஜினி - முருகதாஸ் காம்போ பேச்சுவார்த்தையில் இருந்த நிலையில், இருவருக்கும் சரியான கதை ஏதும் அமையவில்லை. இந்நிலையில், '2.0' எடுத்த லைகா நிறுவனம் தயாரிக்க, இருவரும் இணைய உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகின.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், '27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியை நான் ஒளிப்பதிவு செய்யப்போகிறேன்' என்றதன் மூலமே படம் அதிகாரபூர்வமாக்க நடக்கிறது என்று உறுதியானது. முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கும் இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ,மும்பையில் விரைவில் தொடங்க உள்ளது. ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

முருகதாஸ் - ரஜினி

படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர், கஜினி படத்திற்குப் பிறகு முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மேலும், 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

வில்லன் கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட நிலையில், படக்குழு அதை மறுத்துள்ளனர்.  முக்கியமான கேரக்டரில் நிவேதா தாமஸை நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடந்துவருகிறது.  படத்தைப் பற்றி உண்மையும் புரளியுமாக பல செய்திகள் வந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று ரிலீஸானது.   தேர்தல் சீசன்ல, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்குப் பெரிய ட்ரீட்டாய் அமைந்துள்ளது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.