``400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை!” -இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா! | Andrea plays dual role in upcoming movie

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (09/04/2019)

கடைசி தொடர்பு:12:30 (09/04/2019)

``400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை!” -இரட்டை வேடத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா!

சமீபத்தில், 'தரமணி', 'அவள்', 'விஸ்வரூபம் 2', 'வடசென்னை' போன்ற படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார், ஆண்ட்ரியா. இதைத் தொடர்ந்து, இயக்குநர் தில் சத்யா இயக்கும் 'மாளிகை' படத்தில் இளவரசியாகவும், போலீஸாகவும் நடிக்க இருக்கிறார். 

ஆண்ட்ரியாவின் மாளிகை

ஆண்ட்ரியாவை லீடு ரோலாக வைத்து தில் சத்யா இயக்கிக்கொண்டிருக்கும் படம், 'மாளிகை'. இந்தப் படத்தில், அவர் காவல் துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் நடிக்க இருக்கிறார். படம்குறித்து தில் சத்யா, "ஆக்‌ஷன், ஃபேன்டஸி, ஹாரர் என மூன்று ஜானர்களில் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ரியா நடிக்கும் இளவரசி கதாபாத்திரம், ஃபேன்டஸி போர்ஷனில் இடம்பெறும். அது, 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை. தவிர, போலீஸாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார். அங்கு, அவருக்கு கடந்த கால நினைவுகள் ஞாபகத்துக்கு வருவதில் இருந்து படம் அப்படியே போகும்" என்று தெரிவித்திருக்கிறார். கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இந்தப் படத்தின்மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், மனோ பாலா, 'ஜாங்கிரி' மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீஸரை இன்று மாலை 6 மணிக்கு விஜய் ஆன்டனி வெளியிடுகிறார்.