ஃபாரின் ஷூட்டில் ஆதித்யா வர்மா குழு! - ஜூனில் படம் ரிலீஸ் | adithya varma team opts for foreign shoot

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (09/04/2019)

கடைசி தொடர்பு:07:47 (10/04/2019)

ஃபாரின் ஷூட்டில் ஆதித்யா வர்மா குழு! - ஜூனில் படம் ரிலீஸ்

இந்தியில் ரீமேக்காகியிருக்கும் `அர்ஜூன் ரெட்டி' படத்துக்கு `கபீர் சிங்' எனப் பெயர் வைக்கப்பட்டு, அந்தப் படத்தின் டீசரும் நேற்று வெளியானது. தமிழ் ரிமேக்கான `ஆதித்யா வர்மா' படத்தை அர்ஜூன் ரெட்டியின் அசோசியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்க, துருவ் விக்ரமுடன்  பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து நடித்துவருகிறார்.

ஆதித்யா வர்மா

இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, முந்தைய வெர்ஷனுக்கு இசையமைத்த ரதன் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். ஏற்கெனவே, பாலா இயக்கத்தில் உருவான வர்மா ரிலீஸ் தேதியிட்டு பின் முழுப் படமும் கைவிடப்பட்டது. அதற்குப் பதிலாக எடுக்கப்படும் இப்படத்தை ஆரம்பத்தில் கூறியபடி  ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதில் முனைப்பாக உள்ளது. கடந்த  மார்ச் 10-ம் தேதி தொடங்கிய படத்தின் படப்பிடிப்பு, வேக வேகமாக சென்னையில் நடந்துவந்தது. படத்தின் பாடல் மற்றும் காட்சிகளுக்காக ஆதித்யா வர்மா படக்குழு, தற்போது போர்ச்சுக்கல் பறந்துள்ளது. இதை ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

ஆதித்யா வர்மா      

படத்தில், நடிகை கதாபாத்திரத்திலேயே ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகனுக்கு நண்பனாக வரும் கதாபாத்திரத்தில், `மீசைய முறுக்கு', `கோலமாவு கோகிலா' படங்களில் நடித்த ஸ்மைல் சேட்டை அன்புதாசன், துருவுக்கு நண்பனாக நடிக்கிறார்.