Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்

• ஓப்ரா வின்ப்ஃரே தனது இந்தியச் சுற்றுப்பயணத்தில் பச்சன் குடும்பத்தோடுதான் அதிகம் டச்சில் இருந்தார். தனது ஓப்ரா டி.வி. ஷோவில் ஐஸ்வர்யா பத்தே விநாடிகளில் புடவை உடுத்திக்காட்டிய வேகத்தை ஒளிபரப்பியவருக்கு, புடவை கட்டும் ஆசை வந்துவிட்டது. ஐஸ்வர்யா உதவியோடு புடவை கட்டியவர், போட்டோகிராஃபர்கள் அடித்த கிண்டல் கமென்ட்டுகளைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எவ்வளவோ பண்ணிட்டீங்க... இதைப் பண்ண மாட்டீங்களா?

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• பிப்ரவரி மூன்றாம் தேதியை முகூர்த்தத் தேதியாக அறிவித்து இருக்கிறார்கள் ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா. மும்பை செயின்ட் ஆனிஸ் சர்ச்சில் மோதிரம் மாற்றப்போகிறது இந்த ஜோடி. வழக்கம்போல முதல் ஆளாக ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் அமிதாப். லூஸுப் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றான் நம்ம லூஸுப் பையன்!

இன்பாக்ஸ்

•  இயக்குநர் பாலுமகேந்திரா அமைதியாக ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். சென்னைப் புறநகரில் உள்ள ஒரு வீடு மட்டுமே கதைக் களம். படத்தின் பட்ஜெட் மொத்தமே

இன்பாக்ஸ்

90 லட்சம்தான். படத்தைத் தயாரிப்பது இயக்குநர் சசிகுமார். 'வீடு’ எடுத்தவருக்கு வீட்டுக்கு உள்ளேயே எடுக்கத் தெரியாதா என்ன?!

இன்பாக்ஸ்

• கோலிவுட்டில் இது ஸ்லிம் தேவதைகளின் சீஸன்! பில்லா-2 வில் அஜீத்துடன் செகண்ட் ஹீரோயினாக கிளாமர் சல்சா ஆடியிருக்கிறார் ப்ரூனா அப்துல்லா. அப்பா இத்தாலி, அம்மா அரேபியா, பிறப்பு பிரேசில் என ரகளை காக்டெய்ல் பார்ட்டி ப்ரூனாவுக்கு அழகே அழகாக ஒரு தங்கச்சியும் இருக்கிறாராம். வாங்க... வாங்க!

• 'தல’யின் பில்லா-2 இசைக்கு மைலேஜ் சேர்க்கப் புதிதாக அமெரிக்காவில் இருந்து பிட்புல் என்ற ராப் இசைப் பாடகரைக் களம் இறக்குகிறார் யுவன்ஷங்கர் ராஜா. எம்.ஐ.ஏ.எம்.ஐ. (Money Is a Major Issue) என்ற கலக்கல் ஆல்பத்தின் மூலம் அமெரிக்கர்களின் பல்ஸை எகிற வைத்த பிட்புல், எவர்க்ரீன் 'மை நேம் இஸ் பில்லா’வைப் பாடப்போகிறார். பியூட்டிஃபுல்!

• இந்திக்குப் போகிறார் 'ஆரண்ய காண்டம்’ பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. தெற்காசியத் திரைப்பட விழாவில் 'ஆரண்ய காண்டம்’ கிராண்ட் ஜூரி விருதைப் பெற்று இந்திய அளவில் அங்கீகாரம் பெற்றதால், பாலிவுட் வாய்ப்பு வந்திருக்கிறது. பின்னிப் பெடல் எடுங்க பாஸ்!

இன்பாக்ஸ்

• காதலர் தினத்தன்று வெளியாகப்போகும் 'ஏக் திவானா தா’ படத்தின் பாடல்கள் பாலிவுட்டில் ஹிட். கூடவே, 'ஹோசன்னா’ பாடலுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. ஹோசன்னா இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் சொல் என்பதால், மும்பை வாழ் குரியன் கிறிஸ்துவர் கள் பாட்டுக்கு எதிராகப் பல்லைக் கடிக்க... பாட்டை வைப்பதா, தூக்குவதா என்கிற குழப்பத்தில் இருக்கிறார் கௌதம். தலைகீழாப் போட்டுத் தாக்குறாங்களே?

இன்பாக்ஸ்

• ஏற்கெனவே அரை டஜன் குழந்தைகளுக்குத் தாயான ஏஞ்சலினா ஜோலி, தனது அடுத்த கர்ப்ப சேதியை அறிவித்து இருக்கிறார். ''இன்னுமா குழந்தை?'' என்கிற கேள்விக்கு ''ஏஞ்சலினாவுக்கு இப்போது 35 வயதுதான் ஆகிறது!'' என்று சமாளிஃபிகேஷன் தட்டியிருக்கிறார் கணவர் பிராட் பிட். பல் இருக்கிறவங்க பட்டாணி சாப்பிடுறீங்க!

இன்பாக்ஸ்

• இதயப் பிரச்னை காரணமாக கோமாவில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயசு கணினி மேதையான அர்ஃபா கரீம் உயிரைக் காப்பாற்ற, மைக்ரோஃசாப்ட் நிறுவனமே களம் இறங்கியும் பலன் இல்லை. மிக இளம் வயதிலேயே மைக்ரோஃசாப்ட் நிறுவனத் தேர்வுகளை அனாயாசமாகக் கடந்தவர் அர்ஃபா. பில்கேட்ஸோடு அடிக்கடி சாட்டிங்கில் பேசி அப்டேட் சொல்லும் புத்திசாலிப் பெண்ணின் இழப்பு இது. அர்ஃபாவுக்கு அஞ்சலி!

இன்பாக்ஸ்

• ராகுல் காந்தி மற்றும் சோனியாவுக்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் ராய்பரேலி தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் குதித்திருக்கிறார் பிரியங்கா. 'மாநிலம் முழுவதும் அவர் பிரசாரம் செய்ய வேண்டும்’ என்று உ.பி. காங்கிரஸ் பார்ட்டிகள் பிரியங்காவிடம் மனு மேல் மனு தர, எலெக்ஷன் ட்ரிப்புக்காக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று தயார். அண்ணனோட என்ன பிரச்னை?

இன்பாக்ஸ்

• பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பிரெஞ்சு பத்திரிகைக்கு நிர்வாண போஸ் தந்ததில் இரான் நடிகை ஃபராஹனிக்கு எல்லாப் பக்கங்களில் இருந்தும் எதிர்ப்பு. அவர் இரானுக்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது போஸ் போர் தொடரும் என ஃபராஹனி அறிவிக்க, பிரெஞ்சுப் பத்திரிகைகள் அவரை மொய்க்கின்றன. ஆதரிப்பதா... எதிர்ப்பதா?

இன்பாக்ஸ்

• பாடகி சின்மயிக்கு எப்படியும் 2012-ல் டும்டும்டும் சத்தம் கேட்டுவிடுமாம். 'என்னை யும் என் விளம்பர நிறுவனத்தையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் இன்டெலிஜென்ட் மனிதரைத் தேடுகிறேன்’ என்கிறார் சின்மயி. சரசர சாரக் காத்து பிடிக்காதவன் உண்டா பெண்ணே?!

இன்பாக்ஸ்

• இது பெண் குழந்தை சீஸன்போல... செல்வராகவன் - கீதாஞ்சலி, மகேஷ் பூபதி - லாரா தத்தா ஜோடிகளுக்குப் பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. இருவரது வீட்டிலும் இப்போது திருவிழா எஃபெக்ட். வாழ்த்துக்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism