அட்லீயை சந்தித்த ஷாரூக்; உறுதியான பாலிவுட் படம்! | shahrukh khan met director atlee

வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (10/04/2019)

கடைசி தொடர்பு:19:12 (10/04/2019)

அட்லீயை சந்தித்த ஷாரூக்; உறுதியான பாலிவுட் படம்!

`சர்கார்' படத்துக்குப் பிறகு, அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், நடிகர் விஜய். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மும்பை சென்று ஷாரூக் கானை அட்லீ சந்தித்துவிட்டு வந்ததாகவும் அவர் `விஜய் 63' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அதை படக்குழு மறுத்துவிட்டது.

அட்லீ

பிறகு, தமிழில் இவர் இயக்கத்தில் விஜய் நடித்த `மெர்சல்' படத்தை இந்தியில் ஷாரூக் கானை வைத்து அட்லீ இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இப்படி சொல்லப்பட்டு வந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஷாரூக் கானும் அட்லீயும் சேர்ந்து அமர்ந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர். மேட்சைவிட பரபரப்பாக பேசப்பட்டது இவர்களது மீட்டிங்.  ஏற்கெனவே, ஷாரூக் கானிடம் அட்லீ தனது கதையைச் சொல்லியிருந்தாராம்.

இந்தநிலையில், நேற்று சென்னை வந்த ஷாரூக், அட்லீயின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். சில பல பேச்சுவார்த்தைகளுக்குப் பின், இருவரும் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்துள்ளனர். அந்தப் பேச்சுவார்த்தையில் முடிவாகி இருப்பது என்னவென்றால், ஷாரூக் கானை வைத்து அட்லீ இந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் ஆனால், அது `மெர்சல்' படத்தின் ரீமேக் இல்லை என்பதும் தற்போது வந்த தகவல்படி உறுதியாகியுள்ளது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க