`தர்பார் படத்தோட செகண்ட் லுக் இன்னும் மாஸா இருக்கும்!' - போஸ்டர் டிசைனர் வின்சி ராஜ் | 'darbar' movie poster designer vinci raj says about that movie

வெளியிடப்பட்ட நேரம்: 19:53 (10/04/2019)

கடைசி தொடர்பு:19:53 (10/04/2019)

`தர்பார் படத்தோட செகண்ட் லுக் இன்னும் மாஸா இருக்கும்!' - போஸ்டர் டிசைனர் வின்சி ராஜ்

ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. இந்தப் போஸ்டரை டிசைன் செய்த டிசைனர் வின்சி ராஜிடம் பேசினேன். 

வின்சி ராஜ்

``நான் பக்கா சென்னைப் பையன். பி.சி.ஏ., எம்.பி.ஏ, விஸ்காம்னு மூணு டிகிரி முடிச்சிருந்தாலும் எனக்கு படம் வரையுறது ரொம்பப் பிடிக்கும். இதுதான் என்னை இன்னைக்கு போஸ்டர் டிசைனரா ஆக்கியிருக்கு. விளம்பரத் துறையைச் சேர்ந்த நிறுவனத்துல வேலை பார்த்திருக்கேன். கேன்ஸ் விழாவில் இதுவரைக்கும் என்னோட துறை சார்ந்து மூணு விருதுகள் வாங்கியிருக்கேன். பா.இரஞ்சித் எனக்கு நல்ல பழக்கம். அவருடைய முதல் படத்தில் இருந்தே எனக்கு அவரைத் தெரியும். அதன் மூலமாகதான் 'கபாலி', 'காலா' படத்துக்கு வொர்க் பண்ற வாய்ப்பு வந்தது. முதலில் டைரக்டர் ஆகணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். இந்த வருட இறுதிக்குள்ளே என்னோட இயக்குநர் கனவு நிறைவேறிரும். கண்டிப்பா அதுக்கான அறிவிப்பு வரும்'' என்று நம்பிக்கையுடன் பேச்சைத் தொடங்குகிறார் வின்சி ராஜ். 

``ரஜினி சார் படத்துக்கு வொர்க் பண்றது எப்போவுமே சந்தோஷம்தான். `கபாலி' `காலா' படங்களைத் தொடர்ந்து 'தர்பார்' படத்துக்கும் ஃபர்ஸ்ட்லுக் டிசைன் பண்ணுனது எனக்கு சந்தோஷமான விஷயம். ஏ.ஆர்.முருகதாஸ் சார் டீம் என்கிட்ட படத்தோட கதையை சொன்னப்போ ரொம்ப எக்ஸைட்மென்ட்டா இருந்தது. முக்கியமா, என்னோட நண்பர் ஒருத்தரும் இந்தக் குழுவுல இருந்ததனால் குடும்பத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வொர்க் பண்ணுன மாதிரிதான் ஃபீல் பண்ணினேன்.

ஏ.ஆர்.முருகதாஸ் சார்கூட நான் சேர்ந்து வேலை பார்க்கிற முதல் படமும் இதுதான். பொதுவா படத்தோட கதையைக் கேட்காமல், நான் வேலையைத் தொடங்க மாட்டேன். அப்படிதான் `தர்பார்' படத்தோட கதையும் கேட்டேன். ஆனா, எல்லா படத்துக்கும் க்ளைமாக்ஸ் காட்சியைக் கேட்க மாட்டேன். ஏன்னா, நம்ம படம் பார்க்குறப்போ நமக்கு ஒரு ஆர்வம் இல்லாம போயிரும். அதை மாதிரி இந்தப் படத்துக்கும் கேட்கல. அதனால, க்ளைமாக்ஸ் காட்சி எப்படியிருக்கணும்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கேன். டிசைன் வொர்க் பண்றப்போ எனக்குள்ளே ஆயிரம் கேள்வியை முதலில் நானே கேட்டுப்பேன். `இந்த வொர்க் மக்களுக்குப் பிடிக்குமா..'னு யோசிச்சுப் பார்ப்பேன். அப்படிதான் எல்லா போஸ்டருக்கும் என்னோட வொர்க்கை கொடுப்பேன். 

தர்பார்

ஃபர்ஸ்ட் லுக் எப்படி டிசைன் பண்ணலாம்னு முதலில் யோசிச்சேன். கதையை விட்டு வெளியே போகாத அளவுக்கு இதை டிசைன் பண்ணனும்னு நினைச்சேன். எனக்குத் தோணுன ஐடியாவை முதலில் டீம்கிட்ட சொல்லிட்டு என்னோட வொர்க்கை ஆரம்பிச்சேன். போட்டோ ஷூட்டுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் முதலில் டீமோட டிஸ்கஷன் பண்ணினேன். போட்டோ ஷூட் நடந்தப்போ அவங்ககூடவே இருந்தேன்.

எந்த அளவுகோலில் என்ன என்ன வேணும்னு க்ளியரா சொன்னேன். பேக்ரவுண்ட்ல எந்த மாதிரியான டிசைன் இருக்கணும் முதலில், லே அவுட்டில் டிசைனும் பண்ணி வெச்சிட்டேன். ஆர்ட் டைரக்டர்கிட்ட எந்த மாதிரியான பொருள்கள் வேணும்ங்கிறது முதற்கொண்டு போட்டோகிராஃபர் யார் அப்படிங்கிறது வரைக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக்காக நான்தான் எல்லா முடிவையும் எடுத்தேன். எல்லாரையும் ஒருங்கிணைத்து முழு வேலையும் பார்த்தேன்.

போட்டோ ஷூட் போயிருந்த சமயத்திலேயே படத்தோட டைட்டில் 'தர்பார்' னு தெரியும். படத்தோட போட்டோஸ் பார்த்தப்போ ரஜினி சார் ரொம்ப இளமையா தெரிஞ்சார். அவருடைய ஃபயர் அப்படியே இருக்கு. போட்டோ ஷூட் நடந்துட்டு இருக்கும்போது மானிட்டர்ல அவருடைய கெட்டப் பார்த்துட்டு சந்தோஷத்துல கத்தியிருக்கேன். முக்கியமா, படத்துல அவர் போலீஸ் கேரக்டர்ல வர்றார். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு அவரை இந்தக் கெட்-அப்பில் பார்த்தப்போ ரொம்பவே சந்தோஷப்பட்டேன். 

ஏ.ஆர்.முருகதாஸ்

செகண்ட் லுக் போஸ்டர் டிசைனும் போயிட்டு இருக்கு. அது இன்னும் மாஸா இருக்கும். முக்கியமா, போஸ்டர் டிசைன்ல ரஜினி சார் போலீஸ் அப்படிங்கிறனாலதான் போலீஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை வெச்சிருந்தேன். மத்தப்படி குறியீடுலாம் கிடையாது. ஃபர்ஸ்ட் லுக்ல வர்ற ஆங்கில வார்த்தைகள்கூட நான் செலக்ட் பண்ணி எழுதுனதுதான். ஏ.ஆர்.முருகதாஸ் சார் முழுக்க முழுக்க என்னோட க்ரியேட்டிவ் மைண்ட்டுக்கு விட்டுட்டார் '' என்றவரிடம் `தர்பார்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வடிவேல் படத்தை வைத்து ட்ரோல் பண்ணுனாங்க. இதைப் பார்த்தப்போ என்ன ஃபீல் ஆச்சு..? என்றோம்.

``நான் அவருடைய தீவிர ரசிகர். நான் ரொம்ப மிஸ் பண்ற ஒரு ஃபெர்சன். அவரை வைத்து ஃபர்ஸ்ட் லுக் வைரல் ஆனப்போ சந்தோஷப்பட்டேன். யாரையும் புண்படுத்தாத அளவுக்கு போஸ்டர் இருந்தா சந்தோஷம்தான்'' என்று மகிழ்ச்சியாக முடித்தார் வின்சி ராஜ். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க