``விசாகன் - சௌந்தர்யா... ரெண்டுபேர்ல யார் ரொமான்டிக்?!" | Soundarya rajinikanth and Vishagan interview promo

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (10/04/2019)

கடைசி தொடர்பு:19:15 (10/04/2019)

``விசாகன் - சௌந்தர்யா... ரெண்டுபேர்ல யார் ரொமான்டிக்?!"

ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா - விசாகன் ஆகியோரது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி சென்னை லீலா பேலஸில் நடந்து முடிந்தது. 

சௌந்தர்யா - விசாகன்

தென்னிந்திய அரசியல், சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது, நடிகை கஜோல், தொழிலதிபர் முகேஷ் அம்பானி எனப் பல தேசியப் பிரபலங்களும் கலந்துகொண்ட இத்திருமண நிகழ்வின் முக்கியத் தருணங்கள் குறித்து செளந்தர்யா - விசாகன் தம்பதியின் பிரத்யேகப் பேட்டி, நாளைய ஆனந்த விகடன் இதழில் வெளியாகிறது. விஜே அர்ச்சனாவுடன் இருவரும் கலந்துரையாடிய அப்பேட்டியின் வீடியோவும் நாளை சினிமா விகடன் யூடியூப் சேனலில் வெளியாகும்.

இந்தப் பேட்டியில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த இருவரது கருத்து, தங்களது திருமணத்துக்கு சமூக வலைதளங்களில் வந்த கமென்ட்ஸ், ரஜினி கண் கலங்கி நின்ற தருணம்... எனப் பல்வேறு விஷயங்களை செளந்தர்யாவும், விசாகனும் பகிர்ந்திருக்கிறார்கள்.