`விஜய் 63' படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி! | another heroine joins in vijay 63 film

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (11/04/2019)

கடைசி தொடர்பு:18:55 (11/04/2019)

`விஜய் 63' படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி!

`சர்கார்' படத்துக்குப் பிறகு, அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், நடிகர் விஜய். பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கதிருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதை படக்குழு மறுத்துவிட்டது.

விஜய் 63 படத்தில் இந்துஜா

`மேயாத மான்', `பூமராங்' ஆகிய படங்களில் நடித்த இந்துஜா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் வந்த நிலையில், தற்போது உறுதியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக விஜய் நடித்து வரும் இந்தப் படத்தில் இந்துஜாவுக்கு கால்பந்து வீராங்கனை கேரக்டர் என்பது உறுதியாகி உள்ளது. இவரது போர்ஷனுக்கான ஷூட்டிங் நடந்துவருகிறது. படத்தில் வரும் கால்பந்து விளையாட்டுக் காட்சிகளை பூந்தமல்லியில் பிரமாண்ட செட் அமைத்து எடுத்து வருகின்றனர். ஏற்கெனவே, `சர்கார்' படத்தில் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இந்துஜா நடிக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் பரவிய நிலையில், அவர் மறுப்பு தெரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க