`ஜெயில்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் கைகோக்கும் வசந்தபாலன்! | g.v.prakash and vikram prabhu joins together manirathnam production

வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (11/04/2019)

கடைசி தொடர்பு:21:12 (11/04/2019)

`ஜெயில்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் கைகோக்கும் வசந்தபாலன்!

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த இயக்குநர்களின் ஒருவர் வசந்தபாலன். `காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு, சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வசந்தபாலன். 

ஜெயில்


இந்தப் படத்தில் ஜி.வி-யின் ஜோடியாக 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடரின் அபர்ணதி நடித்திருக்கிறார். கண்ணகி நகர் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தில் நடித்தது மட்டுமன்றி பாடல்களுக்கு இசையமைப்பாளராகவும் ஜி.வி வேலை பார்த்திருக்கிறார். குறிப்பாக, ஜி.வி.பிரகாஷை தமிழில் இசையமைப்பாளராக `வெயில்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதே வசந்தபாலன்தான். 

விஷ்ணு விஷால்

இந்த நிலையில், வசந்தபாலன் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கப்போவதாகத் தகவல் வருகிறது. `ராட்சசன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று விஷ்ணு விஷால், இயக்குநர் பிரபுசாலமன் படமான `காடன்' படத்தில் நடித்தும் வருகிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க