பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய 'வாட்ச்மேன்' படக்குழு! | watchman movie team presents 50 cctv camera to pollachi

வெளியிடப்பட்ட நேரம்: 22:45 (11/04/2019)

கடைசி தொடர்பு:22:45 (11/04/2019)

பொள்ளாச்சியில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திய 'வாட்ச்மேன்' படக்குழு!

'லக்‌ஷ்மி' படத்துக்குப் பிறகு, இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் 'வாட்ச்மேன்.' ஜி.வி.பிரகாஷ் குமார், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, ராம்தாஸ், சுமன் ஆகியோர் நடித்துள்ளனர். கொள்ளைக் கூட்டத்தில் மாட்டிக்கொள்ளும் முதலாளியை ஒரு நாய் எப்படிக் காப்பாற்றுகிறது என்பது படத்தின் கதையாகத் தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா மேற்கொண்டுள்ளார்.

வாட்ச்மேன்

இந்தப் படம் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழக காவல்துறை பல பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அவற்றில் சிசிடிவி கேமரா பொருத்துவதும் ஒன்று. மக்களும் தானாக முன்வந்து இந்த முயற்சிக்கு ஒத்துழைக்கும்படியும் உதவும்படியும் கேட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பொள்ளாச்சியில் 50 சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்காக காவல்துறையிடம் கொடுத்துள்ளது 'வாட்ச்மேன்' படக்குழு. இந்தப் பட விளம்பரத்தின் ஒரு பகுதியாகப் படக்குழுவின் இந்தச் செயல் வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. சமீபமாக, பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தமிழகத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க