``என் அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு விசில் போடுங்க" - விஷால் வெளியிட்ட வீடியோ! | vishal's video for prakashraj

வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (12/04/2019)

கடைசி தொடர்பு:11:55 (12/04/2019)

``என் அண்ணன் பிரகாஷ்ராஜுக்கு விசில் போடுங்க" - விஷால் வெளியிட்ட வீடியோ!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை  ரசிகர்கள் அனைவரும் `சிஸ்கேவுக்கு விசில் போடுங்க' என கமென்ட் செய்துவரும் நிலையில், நடிகர் விஷால், `பிரகாஷ்ராஜுக்கு விசில் போடுங்க' என ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலம் சென்ட்ரல் பெங்களூரு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பிரகாஷ்ராஜ் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையத்தால் அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

விஷால்

இது குறித்து பேசிய விஷால், ``இன்று இருக்கும் அரசியல் சூழலில் சுயேச்சை வேட்பாளராக தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுக்கு நிறைய தைரியம் வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வேண்டும். அந்த வகையில், சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் சரியான வேட்பாளராக என் அண்ணன் பிரகாஷ் ராஜ் இருக்கிறார். சமூகத்தில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தும் கெட்ட விஷயங்களைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக குரல்கொடுத்தும் வருகிறார். இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற எல்லாத் தகுதிகளும் இருக்கிறது. சென்ட்ரல் பெங்களூரு தொகுதியில விசில் சின்னத்தில் நிற்கிறார். பிரகாஷ்ராஜ் சார், நான் உங்களுக்கு விசில் அடிக்கப்போறேன். மக்களும் உங்களுக்கு நிச்சயம் விசில் அடிப்பாங்க. நீங்கள் நினைத்தபடியே இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று உங்க தொகுதி மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என நான் நம்புகிறேன். ஆல் தி பெஸ்ட் பிரகாஷ் ராஜ் சார்" என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க