'ஆதார் அட்டை இல்லாம ஆட்சிசெய்ய வந்துட்டானே!' - வெளியானது 'என்ஜிகே' சிங்கிள் டிராக் | NGK Single track released

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (12/04/2019)

கடைசி தொடர்பு:17:08 (12/04/2019)

'ஆதார் அட்டை இல்லாம ஆட்சிசெய்ய வந்துட்டானே!' - வெளியானது 'என்ஜிகே' சிங்கிள் டிராக்

செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம், 'என்ஜிகே'. இந்தப் படத்தின் சிங்கிள்  டிராக்கான 'தண்டல்காரன்'  யூ-டியூபில் இன்று வெளியாகியிருக்கிறது. 

என்ஜிகே

தமிழ் சினிமாவால் தவிர்க்க முடியாத இயக்குநர், செல்வராகவன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம், 'இரண்டாம் உலகம்'. அதற்குப் பின், இவர் இயக்கிய 'மன்னவன் வந்தானடி', 'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகிய இரண்டு படங்களும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், செல்வராகவன், சூர்யா நடிப்பில் 'என்ஜிகே' என்ற படம் எடுப்பதாக இருந்த செய்தி உறுதியானது. 'ட்ரீம் வாரியர்ஸ்' எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், இணையத்தில் சக்கைபோடு போட்டது. இதைத் தொடர்ந்து, படத்தின் சிங்கிள் டிராக்கான 'தண்டல்காரன்' பாடல் இன்று வெளியானது. சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல்ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். சூர்யாவுடன் செல்வராகவன் முதன்முறையாக கை கோத்திருக்கும் இப்படம், வரும் மே 31-ம் தேதி வெளியாகிறது.