ஜெய்-க்கு ஜோடியாக நடிக்கும் 'பிக் பாஸ்' நடிகை! | bhanu Sree plays Jai’s love interest in Jai’s Breaking News

வெளியிடப்பட்ட நேரம்: 21:16 (12/04/2019)

கடைசி தொடர்பு:21:16 (12/04/2019)

ஜெய்-க்கு ஜோடியாக நடிக்கும் 'பிக் பாஸ்' நடிகை!

நடிகர் ஜெய், மலையாளத்தில்  மம்மூட்டியுடன்  நடித்த 'மதுரராஜா' இன்று வெளியாகியிருக்கிறது. ஐஷ்வர்யா ராஜேஷுடன்  `அறம்' பட இயக்குநர் கோபி நயினார் இயக்கும் படம், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படம் என நடித்துவருகிறார். ‘பார்ட்டி’, ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்ரீன் தெரஸா என மூன்று கதாநாயகிகளுடன் ‘நீயா 2’ இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில், `பிரேக்கிங் நியூஸ்' ஷூட்டிங் தற்போது நடைபெற்றுவருகிறது. 

பானு ஶ்ரீ

இப்படத்தில், ஜெய்-க்கு ஜோடியாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் பங்குபெற்ற பானு ஶ்ரீ நடிக்க உள்ளார்.  நடிகை பானுஸ்ரீ, பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில்  குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர். இப்படம்மூலம்  தமிழில் அறிமுகமாகும் இவர், தெலுங்குத் திரையுலகில் நடனக் கலைஞராக இருந்திருக்கிறார். 'பாகுபலி' படத்தில் தமன்னாவின் தோழியாக நடித்துள்ளார்.   

ஜெய்

தமிழில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இப்படத்தில், 400-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஜானிலால் ஒளிப்பதிவுசெய்ய, ஆண்டனி படத்தொகுப்பைக் கையாள்கிறார். விஷால் பீட்டர் இசையமைக்கிறார்.  

பானு ஶ்ரீ