குறளரசன் திருமணம் - நடிகர் சிவகுமார் குடும்பத்தை நேரில் அழைத்த டி.ராஜேந்தர்! | t rajendar invites sivakumar family for kuralarasan marriage

வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (12/04/2019)

கடைசி தொடர்பு:22:07 (12/04/2019)

குறளரசன் திருமணம் - நடிகர் சிவகுமார் குடும்பத்தை நேரில் அழைத்த டி.ராஜேந்தர்!

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன். இவர் சிம்பு நடித்த  'இது நம்ம ஆளு' படத்திற்கு இசையமைத்திருந்தார். அதன்பிறகு, ஆல்பம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்யவுள்ளார் குறளரசன். அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், இவரும் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அவரது தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாற்றிக்கொண்டார். குறளரசன் - நபீலா அஹமத் ஆகியோரது திருமண வரவேற்பு வரும் 29 ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

குரளரசன்

இந்தத் திருமண விழாவிற்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்து திருமண விழாவிற்கு அழைத்து வரும் வேலையில் பிஸியாக இருக்கிறார் டி.ராஜேந்தர். இந்நிலையில், இன்று சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோரை அவர்களது வீட்டிற்கு சென்று தனது மகன் திருமணத்திற்கு அழைப்பு விடுத்து வந்துள்ளார்.   

திருமண பத்திரிகை
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க