புத்தாண்டு சென்டிமென்ட்! - நாளை வெளியாகும் `காப்பான்' டீசர் | Suriya's Kappan teaser releasing tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 13:03 (13/04/2019)

கடைசி தொடர்பு:13:59 (13/04/2019)

புத்தாண்டு சென்டிமென்ட்! - நாளை வெளியாகும் `காப்பான்' டீசர்

செல்வராகவன் இயக்கும் 'என்.ஜி.கே', கே.வி.ஆனந்த் இயக்கும் 'காப்பான்' என சூர்யாவுக்கு அடுத்தடுத்து இரு படங்கள் வெளி வர இருக்கின்றன. இதைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் 'காப்பான்' படத்தின் டீசர் நாளை வெளியாவதாகத் தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். 

காப்பான்

'லைக்கா' நிறுவனம் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கும் படம் 'காப்பான்.' சூர்யா, மோகன் லால், ஆர்யா போன்ற முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர சயீஷா, சமுத்திரக்கனி, பாலிவுட் நடிகர் பொமன் இரானி போன்ற நடிகர்களும் இதில் நடித்திருக்கின்றனர். சூர்யாவின் 37-வது படமாக வெளிவரும் இப்படத்தின் போஸ்டரும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவு வெளியானது. இதைத் தொடர்ந்து அதே புத்தாண்டு சென்டிமென்ட்டை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் கே.வி.ஆனந்த், இப்படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டான நாளை வெளிடுவதாகத் தனது ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார். ஆக, சூர்யா ரசிகர்களுக்கு நாளை ஸ்பெஷல் தமிழ்ப் புத்தாண்டு காத்திருக்கிறது!