சூர்யாவின் 38-வது படமான 'சூரரைப் போற்று! | Suriya's 38th movie update

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (13/04/2019)

சூர்யாவின் 38-வது படமான 'சூரரைப் போற்று!

செல்வராகவன் இயக்கும் 'என்.ஜி.கே'. அடுத்ததாக கே.வி.ஆனந்த் இயக்கும் 'காப்பான்'. இதைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 38-வது படமான 'சூரரைப் போற்று' படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியிருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சுதா கொங்காரா இயக்குகிறார்.

சூரரைப் போற்று

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்'. இதற்குப் பின் கார்த்தியை லீடு ரோலாக வைத்து பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதற்குப் பின் தமிழ் சினிமாவின் ஃபேவரைட் இயக்குநரான செல்வராகவனுடன் முதன் முதலாக கைகோத்து இருவரும் 'என்'ஜி.கே' படத்தில் பணியாற்றினர். இதற்கு நடுவில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தையும் முடித்திருந்தார் நடிகர் சூர்யா. இப்படித் தொடர்ந்து இரண்டு படங்கள் இவர் நடிப்பில் வெளி வர காத்திருக்கின்றன. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படமான 'சூரரைப் போற்று படத்தின் டைட்டிலும் போஸ்டரும் இன்று வெளியாகியிருக்கிறது. 'இறுதிசுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்காரா இப்படத்தை இயக்குகிறார்.