"எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், வரிசையில் ஏ.எம்.ஆர்" - விமலின் அரசியல் அதகளத்தில் 'களவாணி 2' டிரெய்லர் | vimal, oviya kalavani 2 trailer released

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (14/04/2019)

கடைசி தொடர்பு:14:50 (14/04/2019)

"எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், வரிசையில் ஏ.எம்.ஆர்" - விமலின் அரசியல் அதகளத்தில் 'களவாணி 2' டிரெய்லர்

களவாணி

பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க' படத்தின் மூலமாகப் பலருக்கும் அறிமுகமான நடிகர் விமல், சற்குணம் இயக்கிய  'களவாணி' படத்தின் மூலம் அனைவருக்கும் தெரியும் அளவுக்குப் பிரபலமானார். . இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த விமல் தற்போது களவாணி-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 'களவாணி' படத்தின்  விமல் - ஓவியா - சற்குணம் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகாரித்து இருக்கிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. 

விமல் - ஒவியா.

டிரெய்லரில், அறிக்கி அரசியலில் குதிப்பதற்கு  ஓவியா, ஆர்.ஜே.விக்கி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் உதவி செய்வதுபோல் காட்சிகள் அமைந்துள்ளது.  விமலின் அம்மாவான சரண்யா இன்னும் " ஆனி போயி ஆடி போயி ஆவணி வந்துச்சுனா பையன் டாப்ல வருவான் " வசனம் இப்படத்திலும் வருவது ரசிக்கும் வகையில் இருக்கிறது. மணி அமுதவன், வி2, ரொனால்ட் ரீகன் பாடல்களை இசையமைக்க, நடராஜன் பின்னணி இசையில் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார் மாசாணி. களவாணி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த சூரி  இந்தப் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரசியல் சீசனில் 'களவாணி 2' படம் தரமான அரசியல் சட்டையர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.