ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி! | varalakshmi to act in action thriller chasing

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (14/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (14/04/2019)

ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் வரலட்சுமி!

வரலட்சுமி

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு எனத் தென்னிந்திய மொழிப் படங்கள், டிவி ஷோ எனத் தன்னை பிஸியாகவே வைத்துக் கொண்டு வருகிறார் நடிகை வரலட்சுமி. சோலோ கதாநாயகியாக 'டேனி', 'வெல்வட் நகரம்', ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மறுபுறம், பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்‌ஷா , ஆஷ்னா ஜவேரியுடன் கன்னித்தீவு,  விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் 'நீயா 2', வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கிஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார். 

சேஸிங்

இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்' என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது. ஆக்‌ஷன்  த்ரில்லர் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. அப்பா சரத்குமாருடன் பாம்பன் படத்திலும் வரலட்சுமி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.