`போராடுறதே தப்புனா; போராடுற சூழலை உருவாக்குறதும் தப்புதானே!' - சூர்யாவின் `காப்பான்' டீஸர் | suryas kaapaan teaser released amidst of fanfare

வெளியிடப்பட்ட நேரம்: 19:09 (14/04/2019)

கடைசி தொடர்பு:22:50 (14/04/2019)

`போராடுறதே தப்புனா; போராடுற சூழலை உருவாக்குறதும் தப்புதானே!' - சூர்யாவின் `காப்பான்' டீஸர்

காப்பான்

நேற்று சூர்யா சுதா கொங்காரா  இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சூரரைப் போற்று' ப்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. மே 31 ரிலீசுக்கு தயாராக இருக்கும் என்.ஜி.கே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் 'தண்டல்காரன்' கடந்த வெள்ளியன்று  வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து வெளியாகவிருக்கும் சூர்யாவின் 'காப்பான்' டீஸர் இன்று வெளியானது.

சூர்யா  

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பும் ஆங்கில புத்தாண்டு இரவில் வெளியிட்டனர்  'காப்பான்' படக்குழுவினர். கிறிஸ்துமஸ் தினத்தன்று, இயக்குநர் கே.வி.ஆனந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'சூர்யா 37' படத்துக்கு ரசிகர்களே படத்துகான பெயரைத் தேர்வுசெய்யுமாறு  மீட்பான், காப்பான், உயிர்கா ஆகிய மூன்று தலைப்புகளைப் பதிவிட்டிருந்தார். 

இந்த மூன்று தலைப்புகளை வைத்து ரசிகர்களிடையே ஓட்டெடுப்பு நடத்தி காப்பான் என்ற பெயரை கே.வி.ஆனந்த் 'காப்பான்' என்ற தலைப்புடன்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட்டார். அதேபோல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை ரோகிணி திரையரங்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில்  இந்த டீசர் இன்று வெளியிடப்பட்டது.

kaapaan

கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். ஆர்யா, மோகன்லால், பொமன் இரானி, சமுத்திரக்கனி என நடிகர் பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. சூர்யா கே.வி.ஆனந்த் கூட்டணியில் வெளியான 'அயன்' படத்துக்கு இசையமத்த ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஒளிப்பதிவு செய்த எம்.எஸ்.பிரபு இப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத  ஆண்டனி படத் தொகுப்பாளராகவும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சி இயக்குநராகவும் கிரண் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. 'காப்பான்' ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.