பாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்! | aramm gopi nainar to direct bobby simha

வெளியிடப்பட்ட நேரம்: 21:23 (14/04/2019)

கடைசி தொடர்பு:08:41 (15/04/2019)

பாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்!

பாபி சிம்ஹாவை இயக்க இருக்கிறார் `அறம்' கோபி நயினார்.

பாபி சிம்ஹா

`அறம்' படத்துக்குப் பிறகு கோபி, சித்தார்த்துடன் இணைந்து படம் இயக்கப் போகிறார், ஆர்யாவை வைத்து பாக்ஸிங் படம் இயக்கப்போகிறார் எனப் பல தகவல்கள் வெளியாயின. அதையடுத்து ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க `கறுப்பர் நகரம்' என்ற கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் எனத் தகவல்களும் வெளியாயின.

இறுதியில் அப்படத்தை ஜெய் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கக் கோபி நயினார் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையில் பா.இரஞ்சித் இயக்க முடிவு செய்து தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்  'பிர்சா முண்டா' வாழ்க்கையைத் தானும் படமாக இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.    

கோபி நயினார்

`ஜெய்' படத்தின் இயக்கத்தில் இருக்கும் கோபி தற்போது பாபி சிம்ஹாவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும். ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாபி சிம்ஹா தரப்பு தெரிவிக்கிறது