`20 வருஷத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார் பிரபு!' - பாராட்டும் நடிகை மதுபாலா  | actress madhubala remembers her 20 years old film co star prabhu

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:07:12 (15/04/2019)

`20 வருஷத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார் பிரபு!' - பாராட்டும் நடிகை மதுபாலா 

கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ்.  இவர் கன்னடத்தில் இயக்கிய  காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்கவுள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி தந்துள்ள மதுபாலா  நடிக்கவுள்ளார். 

கலேஜ் குமார் துவக்க விழா

இப்படத்தின் துவக்கவிழா இன்று சென்னையில் நடந்தது. பிரபு தமிழ் சினிமாவில் பயணிக்க ஆரம்பித்து 37 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. 37 வருடத்துக்கு முன்னர் பிரபு அறிமுகமான சங்கிலி படம் ரிலீஸ் ஆன நாளின்று. காலேஜ் குமார் அவருடைய 225-வது படம் என விழாவில் அறிவிக்கப்பட்டது. 

பிரபு

இந்த விழாவில் பிரபு பேசுகையில், ``கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்" என்றார். படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசுகையில் ``ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படினு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு.

மதுபாலா

தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம். பிரபு சார்  இருக்காங்கனு சொன்னவுடனே 20 வருஷத்துக்குப் பிறகு பிரபு சாரோட இந்தப் படத்துல நடிக்கப் போறோம்னு சந்தோஷதத்துல இருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங் நேரத்துல பொள்ளாச்சில என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா தங்கை மாதிரி பார்த்துக்கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு  அவரோட பண்புதான் காரணம். 20 வருஷத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார் பிரபு" எனத் தெரிவித்தார்.