ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் புதிய படம்! | jothika, karthi joins together in new movie

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:00 (15/04/2019)

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடிக்கும் புதிய படம்!

ஜோதிகா மற்றும் கார்த்தி

`தேவ்' படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி `மாநகரம்' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் `கைதி' படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இதுதவிர இயக்குநர் மணிரத்னம் எடுக்கப் போகும் `பொன்னியின் செல்வன்' படத்திலும், `ரெமோ' படத்தின் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படங்கள் தவிர `பாபநாசம்' படத்தின் இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கயிருக்கும் புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். 

பாபநாசம் இயக்குநர் ஜித்து ஜோசப்

 

இந்தப் படத்தில் இவர் தன்னுடைய அண்ணியாகிய நடிகை ஜோதிகாவுடன் நடிக்கயிருக்கிறார். படத்தில் இவர்கள் இருவரும் அக்கா, தம்பியாக நடிக்க இருக்கிறார்களாம். திருமணத்துக்குப் பிறகு சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்காமல் இருந்த ஜோதிகா `36' வயதினிலே மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஜோதிகா

பின்னர் ராதாமோகன் இயக்கிய 'காற்றின் மொழி' படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடித்து வந்த இவர், கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போகும் படம் பற்றிய அறிவிப்பு வந்துள்ளதால், படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் படத்தை ஜோதிகாவின் சகோதரர் சூரஜ் தயாரிக்க உள்ளார். தற்போது ஜோதிகா இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க