`இவனே இவனே ஹீரோ!' - `அலாவுதீனின் அற்புத கேமரா’வின் முதல் சிங்கிள் | alavudinum arputha camera single track released

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (15/04/2019)

கடைசி தொடர்பு:18:59 (15/04/2019)

`இவனே இவனே ஹீரோ!' - `அலாவுதீனின் அற்புத கேமரா’வின் முதல் சிங்கிள்

2013-ம் ஆண்டு வெளியான ‘மூடர் கூடம்’ படம், விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுக இயக்குநர் நவீன் இயக்கி, நடித்திருந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அலாவுதீனின் அற்புத கேமரா

நவீன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். ‘White Shadows புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம்மூலம் தானே தயாரித்தும் உள்ளார், நவீன். ஃபேன்டஸி ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஏழு ஐரோப்பிய நாடுகளில் படமாக்கியுள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் 'இவனே இவனே ஹீரோ' என்ற சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில், விஜய் ஆண்டனி, அருண் விஜய், சென்றாயன் ஆகியோர் வருகின்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க