`ஷர்வானந்த் - சமந்தா ஜோடி; மாலத்தீவு டு கென்யா!' - `96' தெலுங்கு ரீமேக் அப்டேட் | 96 movie telugu remake shoot update

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (15/04/2019)

கடைசி தொடர்பு:21:30 (15/04/2019)

`ஷர்வானந்த் - சமந்தா ஜோடி; மாலத்தீவு டு கென்யா!' - `96' தெலுங்கு ரீமேக் அப்டேட்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம், '96'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' சி.பிரேம்குமார் இயக்கியிருந்த இந்தப் படம், தமிழில் பெரிதும் ஹிட் அடித்தது. கடந்த ஆண்டின் பல விருதுகளை இந்தப் படம் பெற்றது. கோவிந்த் வசந்தா இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு ட்விட்டரில் வெளியிட்டது. 

சமந்தா

விஜய் சேதுபதி கேரக்டரில் ஷர்வானந்த் நடிக்க, த்ரிஷா கேரக்டரில் நடிகை சமந்தா நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மாலத்தீவில் நடந்துவருகிறது. 'The life of ram song' தற்போது படமாக்கப்பட்டுவருகிறது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு கென்யாவில் நடைபெறவும் இருக்கிறது. இதுவரை தெலுங்கு சினிமாவில் ஜோடி சேரமால் இருந்த சமந்தா, ஷர்வானந்த், இந்தப் படத்துக்காக முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். தமிழில் '96' படத்தை இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்க உள்ளார். 

96

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க