ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் `இளையராஜா - யேசுதாஸ்’ காம்போ! | ilayaraja - yesudass combo to mesmerise with this song

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (16/04/2019)

கடைசி தொடர்பு:13:01 (16/04/2019)

ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் `இளையராஜா - யேசுதாஸ்’ காம்போ!

இளையராஜா

விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்'. `தாஸ்' படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். மேலும், விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவாக இருந்த இளையராஜா இசையமைப்பில் படம் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது. 

யேசுதாஸ்

இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். 

``பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `நந்தலாலா' படத்துக்கு இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது. `கத்தி' படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ' பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது   

விஜய் ஆண்டனி

`தமிழரசன்' படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். `ஒஸ்தி', `தேவி' போன்ற படங்களில் நடித்த சோனு சூத், படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூத், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன்,  முனீஸ்காந்த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரனவ் ராஜா, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.