`விவசாயிகளுக்கு எதிரான திட்டம் நாட்டுக்கு எதிரான திட்டம்தான்!' - டி.டி.வி.தினகரன் வெளியிட்ட `அச்சமில்லை அச்சமில்லை' டீசர் | ttv dinakaran released teaser of achchamillai achchamillai

வெளியிடப்பட்ட நேரம்: 16:34 (16/04/2019)

கடைசி தொடர்பு:16:34 (16/04/2019)

`விவசாயிகளுக்கு எதிரான திட்டம் நாட்டுக்கு எதிரான திட்டம்தான்!' - டி.டி.வி.தினகரன் வெளியிட்ட `அச்சமில்லை அச்சமில்லை' டீசர்

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும், ‘அச்சமில்லை அச்சமில்லை' படத்தின் டீசரை டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ளார் 

தினகரன் - அமீர்

இயக்குநர் அமீர் தயாரித்து நடிக்கும் படம், ‘அச்சமில்லை அச்சமில்லை’. நடிகை சாந்தினி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் புதுமுகங்கள் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநரும் அமீரின் உதவி இயக்குநருமான முத்து கோபால் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அருண் குமார் இசை அமைத்துள்ளார். நொய்யல் ஆறு, அதன் சுற்றுப்புறங்களிலுள்ள விவசாயப் பிரச்னைகளை மையப்படுத்தி தயாராகியுள்ளது. இப்படத்தில் அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ளார். 

இந்நிலையில், இந்தப் படத்தின் டீசரை இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டார். முன்னதாக, நடிகர் தனுஷ் இதே படத்திற்கான டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.